கண்ணூர் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருக்கும் பினராயி விஜயன்: ஒளிப்படம் சமூக வலைதளங்களில் பரவல்!

1 Min Read

திருவனந்தபுரம், மே 22 கண்ணூர் ரயில் நிலையத்தில் ஆள் அரவமின்றி ரயிலுக்காக காத்திருக்கும் கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனின் போட்டோ சமூக வலைதளங்களில் பரவலாகி வருகிறது. கேரள அரசியல் வரலாற்றில் வேறு எந்த முதலமைச்சரும் செய்யாத ஒரு சாதனையை பினராயி விஜயன் படைத்துள்ளார் என்றால் அது மிகையல்ல. கேரளத்தில் தொடர்ந்து 10 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தவர் என்ற பெருமை இவருக்கு மட்டுமே உண்டு. இவர் முதல்வராக இருந்த போது கேரளத்தில் இதற்கு முன் வேறு எந்த முதலமைச்சருக்கும் இல்லாத வகையில் மிக அதிக பாதுகாப்பு அளிக்கப்பட்டது. முன்னும், பின்னும் 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் புடைசூழத் தான் எங்கும் செல்வார்.

பினராயி விஜயன் செல்லும் வழியில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படும். நிகழ்ச்சிகளில் இவர் கலந்து கொள்ள வந்தால் கடும் பாதுகாப்பு கெடுபிடிகள் ஏற்படுத்தப்படும். இப்படி கடந்த 10 ஆண்டுகள் கடுமையான காவல்துறை பாதுகாப்பு வளையத்திலும், தொண்டர்கள் புடைசூழவும் இருந்து வந்த பினராயி விஜயன் நேற்று முன்தினம் (20.5.2026) கண்ணூர் ரயில் நிலையத்தில் ஆள் அரவமின்றி ரயிலுக்காக காத்திருக்கும் ஒரு போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரயில் நிலைய நடைமேடையில் உள்ள ஒரு சாதாரண நாற்காலியில் கண்ணூர் மாவட்ட சிபிஎம் செயலாளர் மற்றும் ஒரு பயணியுடன் இவர் அமர்ந்திருந்தார்.

அவருக்கு சற்று தொலைவில் சில காவல்துறையினர் மட்டுமே பாதுகாப்புக்காக இருந்தனர். அருகில் வேறு தொண்டர்கள் யாரும் இல்லை. இந்த ஒளிப்படத்தைப் சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *