கேரளாவில் ஜூன் 15 முதல் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசப் பயணம் முதலமைச்சரான பிறகு வி.டி. சதீசன் முதல் கையெழுத்திட்டார்

திருவனந்தபுரம், மே 19 கேரள முதலமைச்சராக பதவியேற்றுள்ள வி.டி.சதீசன், ஜூன் 15-ஆம் தேதி முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முதலமைச்சரான பிறகு அவர் இதற்கான கோப்பில் முதல் கையெழுத்திட்டுள்ளார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையி லான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றதை அடுத்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வி.டி.சதீசன்  நேற்று (18.5.2026) முதலமைச்சராக பதவியேற்றார். அவருடன் 20 அமைச்சர்கள் பதவியேற்றனர்.

இதையடுத்து, தலைமைச் செய லகம் சென்று பொறுப்பேற்றுக் கொண்ட வி.டி.சதீசன், தனது முதல் அமைச்சரவையைக் கூட்டினார். அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த கோப்புகளில் அவர் கையெழுத்திடார்.

இதையடுத்து செய்தியாளர்களி டம் பேசிய முதல்வர் வி.டி.சதீசன், “தேர்தலின்போது நாங்கள் ஐந்து முக்கிய வாக்குறுதிகளை அளித்தோம். அதில் 2 முக்கிய வாக் குறுதிகள் நிறைவேற்றப்பட உள்ளன. ஒன்று, பெண்களுக்கான இலவச பேருந்து பயணம். வரும் ஜூன் 15-ஆம் தேதி முதல் கேரள அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்க முடியும்.

இரண்டாவது, வயதானவர் களுக்காக தனி துறையை நாங்கள் உருவாக்கப் போகிறோம். இந்தியாவில் இது முதலாவதாக இருக்கும். வயதானவர்கள் எவ்வாறு பராமரிக்கப் படுகிறார்கள் என்பதுதான் ஒரு நாகரிக சமூகத்தின் முக்கிய அளவுகோல். இதை கருத்தில் கொண்டு ஒரு சிறந்த நாகரிக சமூகமாக கேரளாவை மாற்ற நாங்கள் கனவு காண்கிறோம். வயதானவர்களின் நலன்களை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை நாங்கள் கொண்டு வர உள்ளோம். இதற்காக தனி துறையை நாங்கள் ஏற்படுத்த இருக்கிறோம்.

கடந்த ஆட்சிக் காலத்தில் ஊதிய உயர்வு கோரி ஆஷா பணியாளர்கள் நீண்டகாலமாக போராடினார்கள். அப்போது நாங்கள், அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக வாக்குறுதி அளித்தோம். அதன்படி, தற்போது அவர்களுக்கான மாத ஊதியத்தில் ரூ.3,000 உயர்த்தப்படுகிறது. அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ.1,000, பள்ளிகளில் சமையல் பணியாளர்களுக்கு ரூ.1,000, இலவச பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.1,000, ஆயாக்களுக்கு ரூ.1,000 மாத ஊதியம் வழங்கப்படும்.

கேரள சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட ஆளுந ரிடம் நாங்கள் வேண்டுகோள் விடுத்துள் ளோம். மே 21-ஆம் தேதி தொடங்க உள்ள சிறப்புக் கூட்டத் தொடரில் புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பார்கள், மே 22-ாம் தேதி பேரவைத் தேர்தல் நடைபெறும்” என தெரிவித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *