இடைப்பாடியில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா

இடைப்பாடி, மே 10– மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தின் சார்பில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பிறந்த நாள் விழா முன்னிட்டு இடைப்பாடி பெரியார் படிப்பகத்தில் 05.05.2026 மாலை 4.00 மணியளவில் கட்டுரைப் போட்டி நடைபெற்றது

(1) உங்கள் பார்வையில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், (2) புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும்..பெரியாரும், (3) புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் தமிழ்த்தொண்டு, (4) புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பெண்ணடிமைஒழிப்பும்..மூடநம்பிக்கை ஒழிப்பும் – தலைப்புகளில் மாணவ மாணவிகள் சுமார் 25 பேர் எழுதினார்கள்.

இதில் முதல்பரிசு..க.தர்ஷினி, இரண்டாம் பரிசு மா.நர்மதா, மூன்றாம் பரிசு, ப.இலக்கியா. போட்டியில் கலந்து கொண்ட வர்களுக்கு சான்றிதழ் மற்றும் புரட்சிக் கவிஞர் பாடல் புத்தகம்.,திருக்குறள் உரை புத்தகம், உண்மை..மற்றும் பெரியார் பிஞ்சு புத்தகங்கள் வழங்கப்பட்டன. மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இடைப்பாடி.கோவி.அன்புமதி தலைமையேற்க, நகரச் செயலாளர் மெய்யானருள் வரவேற்புரையாற்ற, வெள்ளாறு வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.

மேட்டூர் மாவட்ட கழகத் தலைவர்  கா.நா.பாலு  தொடக்கவு ரையாற்றினார்.

மேட்டூர் மாவட்ட பகுத்தறி வாளர் கழக செயலாளர் சி.மதியழ கன் பரிசுகள் – புத்தகம் வழங்கி வாழ்த்துரையாற்றினார்.

பெரியார் படிப்பகக் காப்பாளர் மெ.காமராஜ் சான்றிதழ் வழங்கினார்.

மாணவி ப.தர்ஷினி நன்றி கூற, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்றது..

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *