நெதர்லாந்து சொகுசுக் கப்பலில் பணியாற்றிய 2 இந்தியர் உட்பட 40 பேருக்கு ஹன்டா வைரஸ் பாதிப்பு

1 Min Read

புதுடில்லி, மே 9- நெதர்லாந்து சொகுசுக் கப்பலில் பணியாற்றிய 2 இந்தியர்கள் உட்பட 40 பேருக்கு ஹன்டா வைரஸ் பாதிப்பு கண்டறி யப்பட்டு உள்ளது.

நெதர்லாந்தைச் சேர்ந்த எம்.வி.ஹோண்டியஸ் என்ற சொகுசுக் கப்பல், கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி அர்ஜென்டினாவின் உஷுவாயா நகரில் இருந்து பயணத்தை தொடங்கியது. இதில் 150 பயணிகள் மற்றும் மாலுமிகள் உட்பட 72 ஊழியர்கள் இருந்தனர்.

அண்டார்டிகா மற்றும் தெற்கு அட்லாண்டிக் பகுதிகளின் தீவுகளுக்கு சொகுசு கப்பல் பயணம் மேற்கொண்டது. புறப்பட்ட சில நாட்களிலேயே 3 பயணிகள் ஹன்டா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தனர்.

இதைத் தொடர்ந்து மேற்கு ஆப்பிரிக்க கடற்கரை பகுதியில் முகாமிட்டிருந்த சொகுசுக் கப்பல் தற்போது நெதர்லாந்தின் டெனெரிப் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. அங்கு பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. ஹன்டா வைரஸ் பாதிப்பு இல்லாத பயணிகள் மட்டும் அவரவர் நாடுகளுக்கு திரும்பிச் செல்ல அனுமதிக்கப்பட்டது.

தற்போதைய சூழலில் 2 இந்தியர்கள் உட்பட சுமார் 40 பேருக்கு ஹன்டா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இவர்கள் சொகுசுக் கப்பலின் ஊழியர்களாகப் பணியாற்றி வந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து இந்திய சுகாதாரத் துறை வட்டாரங்கள் கூறும்போது, “எலிகள் மூலம் மனிதர்களுக்கு ஹன்டா வைரஸ் பரவுகிறது. குறிப்பாக எலிக் கழிவுகள் படிந்த இடங்களைச் சுத்தம் செய்யும்போது மனிதர்களுக்கு வைரஸ் பரவுகிறது.

மேலும் எலிக் கழிவுகளின் நுண்துகள்கள் காற்றில் கலந்து, அவற்றை சுவாசிப்பதன் மூலமும் ஹன்டா வைரஸ் தொற்று ஏற்படுகிறது.

இந்த வைரஸைக் குணப்படுத்த மருந்துகள் இல்லை. எனினும் இது கரோனா வைரஸ் போன்று பரவ வாய்ப்பில்லை’’ என்றனர். ஒன்றிய அரசின் அய்சிஎம்ஆர் இயக்குநர் மருத்துவர் நவீன் குமார் கூறும்போது, “ஹன்டா வைரஸால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லை.

வெளிநாட்டு சொகுசுக் கப்பலில் 2 இந்தியர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை’’ என்று தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *