சமூகநீதிக் கண்காணிப்புக் குழு பதவி விலகல்

2 Min Read

சென்னை, மே 7 கடந்த தி.மு.க. ஆட்சியில் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டது சமூகநீதிக் கண்காணிப்புக் குழு. நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க. ஆட்சியை இழந்துள்ள சூழலில் சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் பேராசிரியர் முனைவர் சுப. வீரபாண்டியன், உறுப்பினர்கள்: பேராசிரியர் முனைவர் சுவாமிநாதன், தேவதாஸ், கவிஞர் மனுஷ்யபுத்திரன், கோ. கருணாநிதி ஆகியோர் பதவி விலகல் கடிதம் அளித்துள்ளார்கள்.

கடன் தள்ளுபடி வாக்குறுதிகளை
நம்ப வேண்டாம்

ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

புதுடில்லி, மே 7 கடன் தள்ளுபடி பெற்றுத் தருவதாகக் கூறும் நபர்களையோ அல்லது அங்கீகரிக்கப்படாத அமைப்புகளையோ தொடர்பு கொள்ள வேண்டாம்.

கடன் தள்ளுபடி செய்வதாக கூறி பொது மக்களை ஏமாற்றும் தவறான பிரச்சாரங்கள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கிகள் அல்லது வங்கி சாரா நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தத் தேவையில்லை என்று கூறி மோசடி அமைப்புகள் மக்களை நம்ப வைக்கின்றன.

கடன் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதாகக் கூறி, அங்கீகாரம் இல்லாத கடன் தள்ளுபடி சான்றிதழ்களை வழங்கி கட்டணம் வசூலிக் கின்றனர். சேவைக் கட்டணம் அல்லது சட்டக் கட்டணம் என்ற பெயரில் கடன் வாங்கிய வர்களிடமிருந்து பணத்தைப் பறிக்கின்றனர். கடன் தள்ளுபடி பெற்றுத் தருவதாகக் கூறும் நபர்களையோ அல்லது அங்கீகரிக்கப்படாத அமைப்புகளையோ தொடர்பு கொள்ள வேண்டாம் என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

தேசிய கல்விக் கொள்கையை முன்மொழியும்

‘பி.எம் சிறீ’ திட்டத்தை செயல்படுத்த வேண்டுமாம்!

தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசு கடிதம்

புதுடில்லி, மே 7 தேசிய கல்விக்கொள்கையை முன்மொழியும் பிஎம் சிறீ திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு தலைமை செயலாளருக்கு ஒன்றிய அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் பி.எம் சிறீ திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசுக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பள்ளிகளை மேம்படுத்தவும், அதற்கான நிதியைப் பெறவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் திருத்தங்கள் ஏதுமின்றி கையெழுத்திடுமாறு ஒன்றிய கல்வி அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

2020-ஆம் ஆண்டின் தேசியக் கல்விக் கொள்கையை முழுமையாக அமல்படுத்துவதை உள்ளடக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத் திடுமாறு தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

இத்திட்டத்தில் இணையாத காரணத்தால், தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் உள்ள சுமார் ரூ.2,152 கோடி வரையிலான கல்வி நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இத்திட்டம் மும்மொழிக் கொள் கையை உள்ளடக்கி இருந்ததால் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு எதிர்த்து வந்தது.

தற்போது புதிய அரசு அமையவுள்ளதால் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் இத்திட்டத்தை அமல்படுத்தும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *