கொத்தடிமைகளாக இருந்த சிறார் உட்பட 51 பேர் மீட்பு

1 Min Read

பண்ருட்டி, மே 7 பண்ருட்டி அருகே, செங்கல் சூளையில் கொத் தடிமைகளாக பணிபுரிந்த, 27 சிறார்கள் உட்பட, 51 பேர் நேற்று  (6.5.2026) மீட்கப்பட் டனர். கடலுார் மாவட்டம், அங்குசெட்டிப்பாளையத்தில் அரிஹரன் என்பவரின் செங்கல் சூளையில் கொத்தடிமைகள் உள்ளதாக வந்த தகவலின்படி, மாவட்ட சட்டப்பணிகள் மீட்பு குழு செயலர் நீதிபதி ஜெனிதா தலைமையில், கடலுார் வருவாய் துறையினர் அங்கு ஆய்வு செய்தனர்.

மீட்கப்பட்டவர்களுக்கு ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்ட வற்றை வருவாய் துறையினர் விரைந்து வழங்கவும், செங்கல் சூளை உரிமை யாளர் மீது நடவடிக்கை எடுக்கவும், மாவட்ட சட்ட பணிகள் குழு செயலர் நீதிபதி ஜெனிதா அறிவுறுத்தினார்.

 

கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் விண்ணபிக்கலாம்

சென்னை, மே 7- ‘அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர, மாணவர்கள் இன்று (7.5.2026) முதல் விண்ணப்பிக்கலாம்’ என, கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, கல்லூரி கல்வி ஆணையர் சுந்த ரவள்ளி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிப்பதாவது:

தமிழ்நாட்டில் உள்ள, 181 அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில், 156 பாடப்பிரிவுகளில், 1 லட்சத்து, 26,959 இளங்கலை பட்டப்படிப்பு இடங்கள் உள் ளன. அதில் சுழற்சி 1இல், 1 லட்சத்து, 1,022 இடங்கள் ; சுழற்சி 2இல், 25,937 இடங்கள் உள்ளன.

மாணவர்கள், தங்கள் விருப்பப் பட்ட அரசு கலை அறிவியல் கல்லுாரி களில், விருப்பப்பட்ட பாடப்பிரிவுகளில் சேர, www.tngasa.in என்ற இணையதளத்தில் இன்று  (7.5.2026) முதல் வரும் 29ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இணையதளம் வழியாக விண்ணப் பிக்க இய லாத மாணவர்கள், அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மய்யங்களில் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *