இளைய சமுதாயம் விரும்பிய மாற்றம் ஏமாற்றமாகி விடக்கூடாது – ரகுபதி பேட்டி

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

புதுக்கோட்டை, மே 5–– இளைய சமுதாயம் விரும்பிய மாற்றம் ஏமாற்றமாகி விடக்கூடாது அமைச்சர் என்று ரகுபதி கூறினார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதி யில் திமுக சார்பில் தொடர்ந்து மூன்றாவதுமுறையாக போட்டியிட்டு ஹாட்ரிக் வெற்றி பெற்ற திமுக வேட் பாளரும், அமைச்சருமான ரகுபதி நேற்று தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வெற்றி பெற்றதற்கானசான்றிதழ் பெற்றார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்

தமிழ்நாட்டில் இளைய சமுதாயம் மாற்றம் வேண்டும். என்று விரும்பியிருக்கிறது. அந்த மாற்றம் அவர்களுக்கு ஏமாற்றமாகி விடக்கூடாது. என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு.எதிர்கால இளைய தலைமுறையினருக் காக பல்வேறு திட்டங்களை நாங்கள் கொண்டு வந்தாலும், அதையெல்லாம் அவர்கள் எந்த விதத்திலே புரிந்து கொண்டார்கள்என்பது எங்களுக்கு தெரியவில்லை. இருந்தாலும் மாற்றத்தை விரும்பியிருக்கின்ற அவர்கள் ஏமாறாமல் இருந்தால் அது வே நாட்டுக்கு நல்லது. 1967க்கு முன்னாலே தமிழ்நாட்டிலே எப்படியெல்லாம் நாம் இருந் தோம் என்பதையெல்லாம் அவர்கள் உணர வந்திருக்க வாய்ப்பு கிடையாது.

இளைய சமுதாயத்தினர் எம்.ஜி.ஆரையும், விஜய்யையும்ஒப்பிட்டு எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தார், ஏன் விஜய் வரக் கூடாதுஎன்கின்ற கேள்வியைத் தான் அவர்கள் முன்வைத்திருக்கிறார்கள். அவர்கள் ஒன்றை மறந்து விட்டார்கள். திராவிட கட்சி களுக்கு மாற்றாக தமிழ் நாட்டில் எந்த கட்சி வந்தாலும் நிலைத்து நிற்க முடியாது. ஏனென்றால் திராவிடம் என்பது தமிழக மக்களுடைய ரத்தத்தோடு ஊறிப்போன ஒன்று. இன்றைய இளைய தலைமுறைக்கு நாங்கள் அதை சரியாக புரிய வைக்க வில்லைஎன்று எண்ணுகின்றேன்.

நிச்சயமாக புரிய வைத்து அந்த புரிதலோடு அடுத்து வருகிற தேர்தல்களை சந்திப் போம். இளைஞர் அணியை யும் நாங்கள் டெவலப் பண்ணுவோம். இனி படித்த இளைஞர்களுக்கு திராவி டத்தினுடைய உண்மையை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். அறியாமையை, இயலாமையை அவர்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ள வைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *