ஜப்பானில் தொடரும் மக்கள் தொகை சரிவு: குழந்தைகள் எண்ணிக்கை 1.33 கோடியாக வீழ்ச்சி

1 Min Read

டோக்கியோ, மே 5- ஜப்பானில் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து 45ஆவது ஆண்டாக சரிவைச் சந்தித்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இன்று (மே 5) ஜப்பானில் ‘குழந்தைகள் நாள்’ கொண்டாடப்படும் நிலையில், அந்நாட்டு உள்விவகார அமைச்சகம் இந்த புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.

14 வயது அல்லது அதற்குக் குறைவான வயதுடைய குழந்தை களின் எண்ணிக்கை 1.329 கோடியாக (13.29 மில்லியன்) குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 3.50 லட்சம் குறைவாகும்.

மொத்த குழந்தைகளில் சிறு வர்கள் 68.1 லட்சம் பேரும், சிறுமியர் 64.8 லட்சம் பேரும் உள்ளனர். 12 – 14 வயதுடையவர்கள் 30.9 லட்சம் பேர். 0 – 2 வயதுடையவர்கள் வெறும் 21.3 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர். இது ஜப்பானில் பிறப்பு விகிதம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதை காட்டுகிறது.

அய்க்கிய நாடுகள் சபையின் 2025-ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை வாய்ப்பு அறிக்கையின்படி, 4 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடுகளில், தென்கொரியாவிற்கு (10.2%) அடுத்தபடியாக, ஜப்பான் (10.8%) மிகக் குறைந்த குழந்தைகளைக் கொண்ட நாடாகத் திகழ்கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *