மத்திய பிரதேச படகு விபத்தில் இறந்த தந்தை, மகன் உடல்கள் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டன கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை

2 Min Read

திருச்சி, மே 5  மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்த காமராஜ், அவருடைய மகன் ஆகியோரது உடல்கள் திங்கள்கிழமை பிற்பகல் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டன.

திருச்சிமாவட்டம், நவல்பட்டு அண்ணா நகரைச் சேர்ந்தவர் ஆர். காமராஜ் (38). இவர், திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் பயிற்சி பெற்றுவிட்டு,மத்திய பிரதேசத்தில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் கடந்த ஓராண்டாகப் பணியாற்றி வந் க்ஷதார். இவருடைய மனைவி கார்குழலி (38), மகன்கள் புவிதரன் (11), தமிழ்வேந்தன் (5) ஆகியோருடன் மத்தியப் பிரதேசத்திலேயே வசித்து வந்தார். கோடை விடுமுறைக் காக திருப்பூர் தாராபுரத்தில் உள்ள அவரது அண்ணன் மனைவி சௌபாக்யா (48),  மகள் இனியா (12) மற்றும் மகன் மயூரன் (8) ஆகியோர் காமராஜ் வீட்டுக்கு அண்மை யில் சென்றுள்ளனர். இந்நிலை யில், காமராஜ் அவருடைய மனைவி, இரண்டு மகன்கள், அண்ணன் மனைவி மற்றும் இரண்டு குழந் தைகள் ஆகிய 7 பேரும் ஜபல்பூரில் உள்ள பர்கி அணைக்கு வியாழக் கிழமை சுற்றுலாச் சென் றுள்ளனர். சுற்றுலாச் சென்ற வர்கள் அணையில் படகு சவாரி மேற் கொண்டபோது, எதிர்பாராத விதமாக அவர் கள் சென்ற படகு அணையில் கவிழ்ந்து விபத்துக் குள்ளானது.

இதில், காமராஜ், கார் குழலி, தமிழ்வேந்தன், அவரது அண்ணிசௌபாக்யா, அவருடைய மகன் மாயூ ரன் ஆகிய 5 பேரும் நீரில் மூழ்கி உயி ரிழந்தனர். புவிதரன் மற்றும் இனியா இருவரும் உயிர் தப்பினர்.

இதையடுத்து, முதல்கட்ட மாக வெள்ளிக்கிழமை மீட்கப் பட்ட கார்குழலி மற்றும் சௌ பாக்யா ஆகியோரது உடல் கள் திருச்சிக்கு கடந்த சனிக் கிழமை கொண்டுவரப்பட்டன. இதைத் தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி, திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் துரை வைகோ ஆகியோர் காமராஜின் வீட்டுக்குச் சென்று அவரதுபெற்றோருக்கு ஆறுதல்தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக் கிழமை மீட்கப்பட்ட காமராஜ், தமிழ்வேந்தன் ஆகியரோது உடல்கள் தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலை யத்துக்கு திங்கள்கிழமை பிற்ப கல் 1.40 மணிக்கு கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து இரு வரது உடல்களும் அவரது வீட்டுக்கு அனுப்பி வைக்கப் பட்டன.

முன்னதாக நவல்பட்டு, அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த திருவெறும்பூர் ஒன்றியச் செயலாளர் இரா.தமிழ்ச்சுடர் உள்ளிட்ட திராவிடர் கழகத் தோழர்கள் இறந்தவர்கள் வீட்டிற்குச் சென்று இறுதி மரியாதை செய்து வந்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *