சென்னை, மே 3- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் இரா.முத்தரசன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
5 மாநிலங்களில் தேர்தல்கள் நடக்கும் வரை அமைதியாக இருந்த ஒன்றிய அரசு, தற்போது வணிக எரிவாயு உருளைகளின் விலையை பன்மடங்கு உயர்த்தியுள்ளது.
இதன் காரணமாக உணவு விடுதிகள், உணவகங்கள், தேநீர் விடுதிகள் என அனைத்திலும் உணவு பொருட்களின் விலை பன்மடங்கு உயரும்.
மே 4ஆம் தேதிக்கு பிறகு, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
எனவே மத்திய அரசு, வணிக எரிவாயு உருளைகளுக்கான விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு இரா.முத்தரசன் கூறினார்.
மே 4ஆம் தேதிக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! இரா.முத்தரசன் கருத்து
Leave a Comment
