பெரியார், அண்ணா, கலைஞர் பெயரில் சான்றிதழ் படிப்புகள்!

2 Min Read

சேலம், பெரியார் பல்கலைக்கழகத்திலுள்ள தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி இருக்கை, பேரறிஞர் அண்ணா இருக்கை மற்றும் முத்தமிழறிஞர் தமிழவேள் கலைஞர் மு.கருணாநிதி ஆய்வு மய்யத்தின் சார்பாக நடத்தப்பெறும் திராவிட இலக்கியம் மற்றும் இதழியல் என்னும் ஓராண்டுப் பகுதி நேர முதுநிலை பட்டயப் படிப்பிற்கும், பெரியாரியல், அண்ணாவியல், கலைஞரியல் ஆகிய ஆறு மாத கால மூன்று பகுதி நேரச் சான்றிதழ் படிப்புகளுக்குமான 2026-2027-ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திராவிட இலக்கியம் மற்றும் இதழியல் என்னும் ஓராண்டுப் பகுதி நேர முதுநிலை பட்டயப் படிப்பு இரண்டு பருவங்களைக் கொண்டது. முதற்பருவத்தில், ‘திராவிட இயக்க வரலாறு’, ‘திராவிட இலக்கியம்’, ‘திராவிட இதழியல்’, ‘உலகத் தத்துவ மரபில் திராவிடவியல்’, ‘திராவிடவியலும் சமூக வளர்ச்சியும்’ ஆகிய அய்ந்து தாள்களும், இரண்டாம் பருவத்தில், ‘திராவிட இலக்கிய அழகியல்’, ‘திராவிட இதழ்களின் நடையியல்’, ‘திராவிடக் கலை ஊடகங்கள்’, ‘திராவிடத் தத்துவவியல்’, ‘திராவிடவியல் ஆய்வுகள்’ ஆகிய தாள்களும் உள்ளன.

பெரியாரியல், அண்ணாவியல், கலைஞரியல் ஆகிய ஆறு மாத கால மூன்று பகுதி நேரச் சான்றிதழ் படிப்புகளில் சேர்ந்திட, மாண வர்கள் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். மேற்கண்ட படிப்புகளுக்கான வகுப்புகள் மாதம் இருமுறை சனிக்கிழமை நாட்களில் நேரடி வகுப்புகளாக நடத்தப்படும். இந்தப் படிப்புகளில் சேர, வயது வரம்பு இல்லை. இவற்றில் சேர விரும்பு வோர், பெரியார் பல்கலைக்கழக இணையதளப் பக்கத்திலுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து, அதனைப் பதிவிறக்கம் செய்து, அவ்விண்ணப்பத்துடன் குறிப்பிடப்பட்டுள்ள உரிய சான்றிதழ் நகல்களை இணைத்து, இயக்குநர், தந்தை பெரியார் இருக்கை, பேரறிஞர் அண்ணா இருக்கை, முத்தமிழறிஞர் கலைஞர் ஆய்வு மய்யம், பெரியார் பல்கலைக்கழகம், சேலம் – 636011 என்னும் முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சல் வழியிலோ சேர்த்திட வேண்டும்.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 31.05.2026. விண்ணப்பம் வந்து சேரவேண்டிய இறுதி நாள்: 10.06.2026. மேலும் விவரங்களுக்கு, இயக்குநர் இரா.சுப்பிரமணி மற்றும் முனைவர் ரா.சிலம்பரசன், மதிப்புறு விரிவுரையாளர் (80121-93831) ஆகியோரைத் தொடர்பு கொள்ளவும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *