‘ஆம் ஆத்மி’ எம்.பி.க்கள் பா.ஜ.க.வில் இணைந்தது சட்டப்பூர்வமானதா? அரசியலமைப்புச் சட்ட நிபுணர் கருத்து

3 Min Read

புதுடில்லி, ஏப். 29- ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி 7 மாநிலங்களவை உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்தது சட்டப்பூர்வமானதா? என்பதற்கு முன்னாள் மக்களவை பொதுச் செயலாளரும் அரசியலமைப்பு நிபுணருமான பி.டி.டி. ஆச்சாரி கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சிக்கு மாநி லங்களவையில் 10 உறுப்பினர்கள் இருந்தனர். கட்சியின் முக்கியத் தலைவரான ராகவ் சத்தா, அக்கட்சியின் மாநிலங்களவை துணைத் தலைவராக இருந்து வந்தார். சமீபத்தில் அந்த பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக அசோக் மிட்டல் நியமிக் கப்பட்டார்.

இந்நிலையில், ராகவ் சத்தா அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைவதாக கடந்த 24ஆம் தேதி அறிவித்தார். அவருடன், அக்கட்சியின் மேலும் 6 மாநிலங்களவை உறுப்பினர்களும் பாஜகவில் இணைவதாக அறிவித்தனர். மேலும், ஆம் ஆத்மியில் இருந்து விலகி பாஜகவில் இணைய இருப்பது தொடர்பாக 7 பேரும் கையெழுத்திட்ட கடிதத்தை அவர்கள் மாநிலங் களவைத் தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணனிடம் சமர்ப்பித்தனர்.

இதையடுத்து, 7 பேரும் டில்லியில் உள்ள பாஜக தலைமையகம் சென்று கட்சித் தலைவர் நிதின் நபின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர். அவர்களுக்கு இனிப்பு வழங்கி நிதின் நபின் வரவேற்றார். இதன்மூலம், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 3 ஆக குறைந்துள்ளது.

கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி, ஒரு கட்சியின் மூன்றில் 2 பங்கு உறுப்பினர்கள் விலகி, வேறொரு கட்சியில் இணைந்தால் மட்டுமே அவர்களின் பதவி பறிபோகாது. இந்த நிலையில், தற்போது மூன்றில் 2 பங்கு உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் விலகியுள்ளதால், அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயாது என கூறப்படுகிறது. இந்த அடிப் படையில், பாஜகவில் இணையும் ஏழு பேரின் கடிதத்தை சி.பி. ராதாகிருஷ்ணன் ஏற்றுக் கொண்டார்.

இதையடுத்து செய்தியாளர் களிடம் பேசிய ராகவ் சத்தா குழுவினர், “இணைப்புக்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பலத்தை நாங்கள் பூர்த்தி செய்துவிட்டோம். எனவே, பாஜகவுடனான இணைப்பு சட்டப்பூர்வமானது” என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், 7 பேர் கட்சி மாறியதை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவைக் குழு தலைவர் சஞ்சய் சிங், மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் மனு அளித்துள்ளார். அதில், ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகிய 7 மாநிலங்களவை உறுப்பினர்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து முன்னாள் மக்களவை பொதுச் செயலாளரும் அரசியலமைப்புச் சட்ட நிபுணருமான பி.டி.டி. ஆச்சாரி, “சஞ்சய் சிங் தாக்கல் செய்துள்ள மனு, மாநிலங்களவைத் தலைவரின் பரிசீலனையில் உள்ளது. மாநிலங்களவைத் தலைவர் அந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட பிறகே ஆம் ஆத்மி கட்சியால் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியும். ஆம் ஆத்மி மாநிலங் களவை உறுப்பினர்கள், பாஜகவுடன் இணைய விடுத்த கோரிக்கையை மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஏற்றுக் கொண்டாலும் அதற்கு எவ்வித சட்ட ரீதியான தாக்கங் களும் இல்லை.

10ஆவது அட்டவணையின் (கட்சித் தாவல் தடைச் சட்டம்) கீழ் வகுக்கப்பட்ட விதிகளின்படி அவையில் ஒரு கட்சியின் பலத்தில் ஏற்படும் எந்தவொரு மாற்றமும் அவைத் தலைவருக்கும் செயலகத்துக்கும் முறையாகத் தெரிவிக்கப்பட வேண்டும். எனவே இந்த இணைப்பு 10ஆவது அட்ட வணைப்படி ஒரு சட்ட மீறல். 10ஆவது அட்டவணையின் 4ஆவது பத்தியின் துணைப்பத்தி, இந்த இணைப்பு என்பது அர சியல் கட்சியின் மூலமாகவே நடைபெற வேண்டும் என்று கூறுகிறது” என தெரிவித்து உள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *