28.02.1948 – குடிஅரசிலிருந்து…
மனிதனை யோக்கியனாக நடத்த முடியாத கடவுளும், வேத புராணங்களும், நமக்கேன்? காசு வாங்கிக் கொண்டு மன்னிப்புக் கொடுத்துவிட்டு மேலும், மேலும் நம்மை அக்கிரமம் செய்யத் தூண்டும் கடவுள் ஏன் நமக்கிருக்க வேண்டும்?
இன்றைய கடவுள் ஓர் ஒத்தைக் காசுக்குக்கூடப் பிரயோஜனம் இல்லை. இன்றைய மதம் ஒரு கடுகளவுக்குக்கூட நமக்குப் பிரயோஜனமில்லை. நமக்கு வேறு மதம், வேறு கடவுள், வேறு கட்டளை வேண்டும்.
– பெரியார்