சென்னை அய்அய்டியில் 3 புதிய ஏஅய் (AI) பாடப்பிரிவுகள் அறிமுகம்!

1 Min Read

சென்னை, ஏப். 25- தொழில்நுட்ப உலகில் வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு துறையில், பொதுமக்களும் மாணவர்களும் தங்களை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் சென்னை அய்அய்டி-யின் ஸ்வயம் பிளஸ் (Swayam Plus) தளம் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.

அய்அய்டி பிரவர்டக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷனுடன் இணைந்து, ‘அனைவருக்குமான ஏஅய்’ என்ற பிரசாரத்தின் கீழ் மூன்று புதிய பாடப்பிரிவுகள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

வளர்ந்து வரும் பொறியாளர் களுக்கான ஏஅய் (AI for Aspiring Engineers): பள்ளிக் கல்வியை முடித்து விட்டு பொறியியல் படிப்பிற்குள் நுழையும் மாணவர்களுக்குத் தேவையான அடிப்படைத் திறன்களை இது வழங்கும். இதில் பைதான், ஏஅய் மற்றும் இயந்திர கற்றல் (Machine Learning) ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்படும்.

நிர்வாகிகளுக்கான ஏஅய் (AI for Managers): நிர்வாகத் துறையில் இருப்பவர்கள் ஏஅய் மற்றும் மெஷின் லேர்னிங் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, தரவுகளின் அடிப்படையில் சரியான முடிவுகளை எடுக்க இந்தப் படிப்பு உதவும்.

பொறியியல் தூண்டல் (Engineering Prompting): ஏஅய் கருவிகளுடன் திறம்பட உரையாடி, துல்லியமான மற்றும் சரியான பதில்களைப் பெறுவதற்கான நுட்பங்களை இந்தப் பாடப்பிரிவு கற்றுத்தரும். முன் அனுபவம் தேவையில்லை. இந்தப் பாடப்பிரிவுகளில் சேர கோடிங் (Coding) அல்லது ஏஅய் குறித்து முன்கூட்டியே தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. யார் வேண்டுமானாலும் சேரலாம்: தொடக்கநிலை மாணவர்கள் முதல் பணிபுரியும் வல்லுநர்கள் வரை அனைவரும் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

முக்கியத் தேதிகள் மற்றும் இணையதளம்

விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 10.

பதிவு செய்ய வேண்டிய இணையதளம்: swayam-plus.swayam2.ac.in/ai-for-all-courses.

செயற்கை நுண்ணறிவுத் துறையில் காலடி எடுத்து வைக்க விரும்பும் ஆர்வம் கொண்ட எவருக்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என சென்னை அய்அய்டி தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *