தமிழ்நாட்டிற்கே முன்னுதாரணம் ஏற்காடு தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு.. சாதித்த மலைக் கிராம மக்கள்!

1 Min Read

ஏற்காடு, ஏப். 24 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மாநிலம் முழுவதும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதியில் உள்ள ஒரு குக்கிராமம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஏற்காடு தொகுதிக்குட்பட்ட கொம்புத்தூக்கி என்ற மலைக் கிராமத்தில் வசிக்கும் மக்கள் அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையை 100 சதவீதம் நிறைவேற்றியுள்ளனர். இந்த கிராமத்தில் மொத்தம் 301 வாக்காளர்கள் உள்ளனர். நேற்று (23.4.2026) மாலை 6 மணி நிலவரப்படி, பட்டியலில் உள்ள 301 வாக்காளர்களுமே வந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக ஏற்காடு தொகுதியில் 91.80 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், கொம்புத்தூக்கி கிராமத்தின் இந்த 100 சதவீதம் சாதனை தேர்தல் அதிகாரிகளிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. ஒரு வாக்காளர் கூடத் தவிர்க்காமல் அனைவரும் வாக்களித்தது மற்ற தொகுதிகளுக்கு முன்னுதாரணமாகப் பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் நேற்று (23.4.2026) நடைபெற்ற தேர்தலில் சராசரியாக 85.15 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் அதிகபட்சமாக வீரபாண்டி தொகுதியில் 93.41 சதவீதமும், குறைந்தபட்சமாகப் பாளையங்கோட்டையில் 68.97 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *