சென்னை, ஏப். 21 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், நவீன தொழில் நுட்பமான ‘கால் பிரிட்ஜிங்’ முறை மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 75,000 வாக்குச்சாவடி முகவர்களுடன் ஒரே நேரத்தில் அலைபேசி வாயிலாக உரையாடி ஆலோசனைகளை வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:
விழிப்புணர்வு
வாக்குப்பதிவு நாளில் முகவர்கள் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும் தோல்வி பயத்தில் எதிர்க்கட்சியினர் முறைகேடுகளில் ஈடுபட வாய்ப்புள்ளது. விதிமீறல்கள் நடந்தால் உடனடியாக ‘வார் ரூம்’ எண்ணிற்கு (08069446900) புகார் அளிக்க வேண்டும்.
விழிப்புணர்வு: வாக்குப்பதிவு தொடங்கி முடியும் வரை முகவர்கள் சாவடியிலேயே இருக்க வேண்டும். பதிவு முடிந்த பின் ‘பார்ம் 17’ (Form 17C) சேகரித்த பிறகே ஓய்வெடுக்க வேண்டும்.
மக்களுக்கு உதவி: முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கத் தேவையான வாகன வசதி மற்றும் உதவிகளை முகவர்கள் முன்னின்று செய்ய வேண்டும்.
“நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட ‘டி-லிமிட்டேஷன்’ போன்ற சட்டங்கள் மூலம் தமிழ்நாட்டின் குரலை முடக்கப் பார்க்கிறார்கள். தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக்க முயலும் சதியை நாம் முறியடிக்க வேண்டும். டெல்லியிலிருந்து நம்மை ஆட்டிப்படைக்க நினைப்பவர்களின் கனவை ஒரு வலிமையான ஆட்சி மூலம் தகர்ப்போம்.”
தேர்தல் அறிக்கை மற்றும் கடந்த அய்ந்தாண்டு கால சாதனைகள் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதிக வாக்குகளைப் பெற்றுத் தரும் முகவர்களைத் தான் நேரில் சந்திப்பேன்.
“இந்த இரண்டு நாட்கள் ஓய்வின்றி உழைத்தால், அடுத்த மாதம் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவது உறுதி”
இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

