கலாசேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை மூன்று பேராசிரியர்களுக்கு தடை

2 Min Read

அரசியல்

சென்னை, ஏப். 5- கலாசேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் புகாருக்கு உள்ளான 3 பேராசிரியர் களை கல்லூரிக்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது என கல்லூரி இயக்குநருக்கு மாநில மகளிர் ஆணைய தலைவி உத்தரவிட்டு உள்ளார்.

சென்னை திருவான்மியூரில் கலாசேத்ரா அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் ருக்மணிதேவி நுண்கலைக்கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகள் பலருக்கும் பேராசிரியர்கள், உதவி நடன ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக மாநில மகளிர் ஆணைய தலைவி ஏ.எஸ்.குமாரி நேரில் சென்று விசாரணை நடத்தி னார். அப்போது மாணவிகளிடம் அவர் எழுத்துப்பூர்வமாக பல் வேறு தகவல்களை திரட்டினார்.

மாணவிகள் அளித்த வாக்குமூ லத்தின் அடிப்படையில் அடுத்தக் கட்ட நடவடிக்கையை எடுப்பதற்கு வசதியாக கலாசேத்ரா இயக்கு நரான ரேவதி ராமச்சந்திரன், துணை இயக்குநர் பத்மாவதி ஆகியோரிடம் விசாரணை நடத்த மகளிர் ஆணையம் முடிவு செய் தது. அதன்படி, ரேவதி ராமச்சந் திரன், பத்மாவதி மற்றும் பாலியல் புகாருக்கு உள்ளாகும் மாணவிகள் புகார் அளிப்பதற்காக கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ள உள்ளீட்டு புகார் குழு (அய்.சி.சி. எனப்படும் இன்டர்னல் கம்ப்ளைன்ட் கமிட்டி) உறுப்பினர் உமாம கேஸ்வரி ஆகியோர் சென்னை சேப்பாக்கம் கலசமகாலில் உள்ள மகளிர் ஆணையத்தில் நேற்று (3.4.2023) நேரில் ஆஜராகினர்.

அப்போது அவர்களிடம், கலாசேத்ரா கல்லூரியில் அமைக் கப்பட்டுள்ள உள்ளீட்டு புகார் குழு செயல்படும் விதம் குறித்தும், பாலியல் தொல்லை தொடர்பாக மாணவிகள் அந்தக்குழுவில் புகார் ஏதேனும் அளித்து உள்ளார்களா? என்பது குறித்தும் ஆணைய தலைவி குமாரி பல்வேறு கேள்வி களை எழுப்பினார். அவர்கள் அளித்த பதிலை ஆணையம் பதிவு செய்து கொண்டது. சுமார் 45 நிமிடம் அவர்களிடம் விசாரணை நடந்தது.

இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதன் பின்பு ஆணையத்தின் தலைவி குமாரி செய்தியாளர்க ளிடம் கூறியதாவது:- 

கலாசேத்ரா கல்லூரியில் மாணவிகள் நலனுக்காக அமைக் கப்பட்டுள்ள உள்ளீட்டு புகார் குழு முறையாக அமைக்கப்பட்டுள் ளதா? என்பது குறித்தும், அந்த கமிட்டியில் மாணவிகள் பாலியல் புகார் ஏதேனும் அளித்து உள்ளார் களா? என்றும் கேள்வி எழுப்பி னேன்.

தற்போது மாணவிகள் புகார் அளித்துள்ள பேராசிரியர் உள் ளிட்டோர் மீது உள்ளீட்டு புகார் குழுவில் எந்தவித புகாரும் பெறப் படவில்லை என்றும், இதற்கு முன்பாக 3 புகார்கள் வந்துள்ள தாகவும் கமிட்டியின் உறுப்பினர் தெரிவித்தார். உள்ளீட்டு புகார் குழு தொடர்பான ஆவணங்களை கேட்டுள்ளேன்.

நேரடி தேர்வு:

இந்த ஆவணங்களை யாரிட மாவது கொடுத்து அனுப்பினால் போதும் என்றும், நேரில் வர தேவையில்லை என்றும் அறிவு றுத்தி உள்ளேன். மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அறிவு றுத்தி உள்ளேன்.  மாணவிகளுக்கு ஆன்லைன் தேர்வு பிடிக்கவில்லை. நேரடி தேர் வையே விரும்புகிறார்கள் என்று கலாசேத்ரா இயக்குந ரிடம் தெரிவித்தேன். அதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து மாணவி களுக்கு தகவல் தெரிவிப்பதாக கூறியிருக்கிறார்.

கல்லூரிக்குள் அனுமதிக்கக்கூடாது

பாலியல் புகாருக்கு உள்ளான நடன ஆசிரியர்கள் 3 பேரை கல்லூ ரிக்குள் அனுமதிக்கக்கூடாது என தெரிவித்துள்ளேன். உள்ளீட்டு புகார் குழுவை பலப்படுத்த வேண் டும் என்றும், இந்தக்குழு குறித்து மாணவிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *