ஒரு லிட்டர் பாலில் 40 லிட்டர் தண்ணீர்

1 Min Read

உத்தரப்பிரதேசத்தின் மஹோபாவில் உள்ள ஓர் அரசுப் பள்ளியில் சுமார் 50 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தின் கீழ் பால் வழங்கப்பட வேண்டும். மாநில அரசோ பஜனை பாடுவதிலும் இசுலாமியர்களின் வீடுகளை இடிப்பதிலுமே முனைப்பு காட்டி வருகிறது.

பள்ளியின் தலைமை ஆசிரியர் முன்னிலையிலேயே, 40 லிட்டர்  வாளி நிறைய தண்ணீரை நிரப்பி, அதில் வெறும் இரண்டு 500 மிலி பால் பாக்கெட்டுகளை மாணவர்களுக்குப் பரிமாறியுள்ளனர். 50 குழந்தைகளுக்கு வெறும் ஒரு லிட்டர் பாலை தண்ணீரில் கலந்து கொடுத்த இந்தச் செயல், மாணவர்களுக்குச் சேர வேண்டிய ஊட்டச்சத்தை முற்றிலுமாகப் பறிப்பதாக அமைந்துள்ளது.

மாணவர்களின் ஊட்டச்சத்தில் முறைகேடு செய்ததற்காக பள்ளியின் தலைமை ஆசிரியைக்கு ‘விளக்கம் கேட்டு’ அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

சாமியார் ஆட்சியில் இப்படி நடப்பது வியப்பில்லை.   இதுதான் பா.ஜ.க. பெரும்பாலான  பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலும், ஒன்றியத்திலும் நடக்கிறது.

50 குழந்தைகளுக்கு வெறும் 1 லிட்டர் பால் கொடுத்துள்ளனர்.

உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், அரியானா, ராஜஸ்தான் என பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த அவலம் தான் தொடர்கிறது.

மத்தியப் பிரதேசத்தில் மூன்று மாதங்கள் இடைவெளியில் 4 பள்ளிகளில் மதிய உணவு பாடப்புத்தங்களைக் கிழித்து அந்த தாளில் சாப்பாடு போட்டு பேரவலம் நிகழ்ந்துள்ளது ஒருமுறை இரண்டு முறை அல்ல 4 முறை நடந்தும் இது தொடர்பாக மத்தியப் பிரதேச பாஜக அரசு இது தொடர்பாக விளக்கம் அளிக்கவில்லை.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள பள்ளி ஒன்றில் முதல் நாள் உணவகங்களில் மீதமாகி குப்பையில் போட உள்ள  ரொட்டி மற்றும் பூரியை அள்ளிகொண்டு வந்து பிள்ளைகளுக்கு கொடுக்கும் அதிர்ச்சியான நிகழ்வும் இதே உத்தரப் பிரதேச பள்ளியில் நடந்துள்ளது!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *