இனமானம், தன்மானத்திலும் பெரிது; உண்மையில் பெரிது. அது பட்டம் பெற்ற கல்வியிலும் பெரிது. பணம் ஊற்றுள்ள உத்தியோகத் தியாகத்திலும் பெரிது. பரம்பரை மகாராஜா பட்டத்திலும், ‘சர்’ரிலும் பெரிது. மணிக்கு ஒரு லட்சம் வருவாய்க் குவியலுக்கும் பெரிது. பதவி வேட்டைக்காரர்கள் இதனை உணர்ந்து இனமானத்தையும் – தன்மானத்தையும் கண் போன்றுக் கருத வேண்டாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

