முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து எடப்பாடி பழனிசாமி முற்றிலும் நிதானம் இழந்து பேசுகிறார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி கண்டனம்

1 Min Read

முதலமைச்சர் மு.க.  ஸ்டாலின் குறித்து

எடப்பாடி பழனிசாமி முற்றிலும் நிதானம் இழந்து பேசுகிறார்

தமிழர் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி கண்டனம்

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் அண்மைக்காலப் பேச்சுகள் அரசியல் நாகரிகத்திற்கேற்ப அமையவில்லை. தானும் ஒரு தேர்தல் போட்டியாளர் என்பதைக் கடந்து, தான் வகிக்கும் பொறுப்புகளை மறந்து, தன்னிலை இழந்து பேசிவருகிறார்.

தேர்தலில் வெற்றி – தோல்வி என்பதை விட, மக்கள் மனதில் நாம் என்னவாகப் பதிவாகியிருக்கிறோம் என்பதே முக்கியமாகும். அதில் திரு. எடப்பாடி பழனிசாமி, மிகப்பெரிய கீழிறக்கத்துக்குப் போய்விட்டார்.

‘தோல்வி உறுதி’ என்று தெளிவாகத் தெரிந்ததால், முற்றிலும் நிதானம் இழந்து, ஜன்னியில் பிதற்றுவதைப் போல அவரது பேச்சு அமைந்திருக்கிறது.

ஏற்கெனவே துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களைக் குறித்துப் பேசியதும், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைக் குறித்துப் பேசியிருப்பதும் பண்பற்ற பேச்சுகள்; அநாகரிகத்தின் உச்சம். இது கண்டனத்திற்குரியதாகும்.

 கி.வீரமணி

 

   தலைவர்,

  திராவிடர் கழகம்

9.4.2026

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *