தமிழர் தலைவர் மற்றும் தோழர்களுக்கு இளநீர் வழங்கி ஆண்டிபட்டி ஸ்டார் நாகராஜன் அன்போடு வரவேற்றார். சின்னமனூரில் எழுத்தாளர் பாலசுப்பிரமணியம் அவர்களின் இல்லத்திற்கு சென்ற தமிழர் தலைவர், அவருக்கு பயனாடை அணிவித்து பாராட்டுகளைத் தெரிவித்தார்.

கூடலூர் டி.பி.எஸ்.ஆர்.ஜனார்த்தனம் அவர்களின் இல்லத்திற்கு சென்ற தமிழர் தலைவருக்கு அவருடைய குடும்பத்தினர் பயனாடை அணிவித்து அன்போடு வரவேற்றனர். பெரியார் சமத்துவ மயானப் பணியாளர்கள் தமிழர் தலைவரைச் சந்தித்து பயனாடை அணிவித்தனர்.

