திசையெங்கும் போற்றி புகழப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நிர்வாக ஆளுமை !

7 Min Read

அய்ந்தாண்டு கால ‘திராவிட மாடல்’ அரசின் மகத்தான சாதனைகளுக்காக
ஒன்றிய அரசும், பல்வேறு நிறுவனங்களும்,
பத்திரிகைகளும் பாராட்டி வழங்கியுள்ள விருதுகள்!

சென்னை, ஏப். 8– திராவிடநாயகர் மு.க.ஸ்டாலின் அவர்க ளின் அய்ந்தாண்டு கால ‘திராவிட மாடல்’ அரசின் மகத்தான சாதனைகளுக்காக இந்தியாவில் இதுவரை எந்த முதலமைச்சரும் பெற்றிராத வண்ணம் திசையெட்டும் போற்றிப் புகழ ஒன்றிய அரசும், பல்வேறு நிறுவனங்களும், பத்திரிகைகளும் பாராட்டி விருதுகள் வழங்கியுள்ளன,

அது பற்றிய விவரம் வருமாறு:

திராவிட நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பொற்கால ஆட்சியில் அய்ந்தாம் ஆண்டு முடிவடையும் நிலையில், அவர் புகழ் அவனியெங்கும் எதிரொலிப்பதைக் காண முடிகிறது.

அய்.நா. மன்றத்திலும் பாராட்டு!

முதலமைச்சர் அவர்கள் தொலைநோக்குச் சிந்தனை களுடன் திட்டமிட்டு வகுத்து நடை முறைப்படுத்தியுள்ள திட்டங்கள் மற்ற மாநிலங்களுக்கெல்லாம் வழி காட்டுகின்றன. காலை உணவுத் திட்டம், இல்லம் தேடி மருத்துவம் திட்டம் முதலானவை இந்திய நாடு கடந்து, அயல் நாடுகளிலும், அய்.நா. மன்றத்திலும் பாராட்டி வரவேற்கப்படுகின்றன.

திராவிட நாயகர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற காலத்தில் அச்சுறுத்திய கரோனா, அடுத்தடுத்து நிகழ்ந்த புயல் மழை வெள்ளக் கொடுமைகள், கரம் கொடுத்து உதவ வேண்டிய ஒன்றிய அரசின் பாராமுகம், அது அளிக்க வேண்டிய நிதியையும் அளிக்க முடியாதென நாடாளுமன்றத்திலேயே கூறிய பிடிவாதம் அனைத்தையும் கடந்து தமிழ்நாட்டு மக்களை எல்லா வகையிலும் காத்து ‘எல்லாருக்கும் எல்லாம்’ என்பதைத் தத்துவமாகவே வடித்துத் திட்டங்களைச் செயல்படுத்தி தமிழ்நாட்டினை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக உயர்த்தியுள்ளார்கள்.

புகழின் உச்சத்தைத் தொட்டுள்ளார்
நம் திராவிட நாயகர்

இந்தியாவின் சிறந்த முதலமைச்சர் எனப் பாராட்டப்பட்டபோது, ‘‘எனக்குப் புகழோ, பாராட்டோ தேவையில்லை: தமிழ்நாடு இந்தியாவின் முதல் மாநிலம் எனப் புகழப்படுவதையே விரும்புகிறேன். அதுவே எனது ஆசை’’ என்று கூறிப் பாடுபட்டு அந்த இலக்கை இன்று அடைந்து புகழின் உச்சத்தைத் தொட்டுள்ளார் நம் திராவிட நாயகர் அவர்கள்!

இன்று தமிழ்நாட்டு மக்கள் பாராட்டுகின்றனர். மகளிர், மாணவர்கள் தொழிலாளர்கள், தொழில் முகவர்கள் அனை வரும் பாராட்டுகின்றனர். பத்திரிகைகள் பாராட்டுகின்றன. ஊடகங்கள் போற்றுகின்றன. பிற மாநில அரசுகள் பாராட்டுகின்றன. நீதிமன்றங்கள் பாராட்டுகின்றன. இத்தனைக்கும் மேலாக ஒன்றிய அரசே திராவிட அரசைப் பாராட்டி விருதுகளை வழங்கியுள்ளது. அவையெல்லாம் தமிழ்நாட்டிற்கும், நமக்கும் பெருமையையும். பெரு மிதத்தையும் ஏற்படுத்தும். ஏராளமான அந்த ஒன்றிய அரசின் பாராட்டுப் பட்டியலில் இதோ சில:-

ஒன்றிய அரசின் விருதுகள் பட்டியல்!

திராவிட நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் தமிழ்நாடு காவல்துறை தலைவர் சென்னை எழும்பூரில் அமைந்துள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு British Standards Institution 3.11.2021 அன்று வழங்கிய ISO 270001/ 2013 பன்னாட்டுத் தரச் சான்றிதழைக் காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.

மு.க.ஸ்டாலின் அவர்களிடம் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் அதுல்ய மிஸ்ரா, புதுடில்லியில் 30.11.2024 அன்று நடைபெற்ற இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு சார்பில் FICCI Turf 2024 14 ஆவது பன்னாட்டு விளையாட்டுக் கருத்தரங்கில் 2024ஆம் ஆண்டிற்கான இந்திய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழாவில் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டு வழங்கிய விருதை 4.12.2024 அன்று காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.

மாற்றுத் திறனாளிகளுக்குச் சிறப்பாகச் சேவை புரிந்த முதல் மாநிலமாகத் தேர்வு செய்யப்பட்டு ஒன்றிய அரசால் 6.12.2021 அன்று வழங்கப்பட்ட விருது!

ஒன்றிய சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை 8.12.2021 அன்று மாற்றுத் திறனாளிகள் உரிமை ஏற்றத்திற்காக வழங்கிய தேசிய விருது!

13.12.2021 அன்று மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட தேசிய விருதுகள்!

சிறந்த நீர் மேலாண்மைக்காக 29.3.2022 அன்று தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்றமைக்கான விருது !

மெப்ஸ் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் ஏற்றுமதி நிறுவனங்களின் சேவையைப் பாராட்டி குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் 25.4.2022 அன்று வழங்கிய சிறந்த ஏற்றுமதியாளர் விருது!

தேசிய அளவில் சிறப்பாகச் செயல்பட்ட தமிழ்நாட்டின் 12 ஊராட்சிகளுக்கு ஒன்றிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சா யத்துராஜ் அமைச்சகம் 11.5.2022 அன்று வழங்கிய விருது!

மகப்பேறு சிக்கல்கள் உள்ள கர்ப்பிணித் தாய்மார்களைக் கண்டறிந்து சிகிச்சை வழங்வதில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடம் என 27.6.2022 அன்று வழங்கப்பட்ட ஒன்றிய விருது!

இந்திய அளவில் தேர்வு செய்யப்பட்ட 112 மாவட்டங்களில் ஒன்றாக குறு – சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மேம்பாட்டிற்காக விருதுநகர் மாவட்டத்தின் சிறந்த பங்களிப்பிற்கு 1.7.2022 அன்று வழங்கப்பட்ட தேசிய அளவிலான முதல் பரிசு!

சுகாதாரத்திற்கான மதிப்பீட்டில் தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்றமைக்கு 2.10.2022 அன்று வழங்கப்பட்ட குடியரசுத் தலைவர் விருது.!

இந்தியாவில் தூய்மையைப் பராமரிப்பதில் சிறந்து விளங்கிய தமிழ்நாட்டிற்குத் தேசிய அளவில் மூன்றாவது பரிசாக 2.10.2022 அன்று கே.என்.நேரு அவர்களிடம் குடியரசுத் தலைவர் வழங்கிய விருது!

ஜல்சக்தித் திட்டத்தினை தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயல்படுத்தி முதலிடம் பெற்றமைக்காக 2.10.2022 அன்று குடியரசுத் தலைவர் வழங்கிய தேசிய விருது!

ஒன்றிய அரசின் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் சிறந்த உள்நாட்டு மீன் உற்பத்தி மாவட்டமாக தேர்வு செய்யப்பட்ட தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 13.12.2022 அன்று வழங்கப்பட்ட விருது.!

ஜெர்மன் தலைநகர் பெர்லின் பன்னாட்டு சுற்றுலா சந்தையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு சுற்று லாத்துறைக்கு 8.3.2023 அன்று வழங்கப்பட்ட இந்திய அளவில் சிறந்த சுற்றுலா அமைச்சகத்திற்கான பட்வா பன்னாட்டுப் பயண விருது!

கடற்கரை முகப்புப் பகுதி மேம்பாட்டுப் பணிகளைச் சிறப்பாக மேற்கொண்டமைக்காக 28.3.2023 அன்று வழங்கப்பட்ட ஒன்றிய அரசின் சுற்றுலா அமைச்சக விருது!

காசநோயை ஒழிக்க தமிழ்நாடு எடுத்துவரும் முயற்சி களைப் பாராட்டி வாரணாசியில் 6.4.2023இல் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்நாட்டின் ஒன்பது மாவட்டங்களுக்கு வழங்கப்பட்ட விருதுகள்!

காகிதம் இல்லாச் சட்டமன்றத் திட்டத்தினை மிகச் சிறப்பாகவும், விரைவாகவும் செயல்படுத்தியமைக்காக ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் 3.7.2023 அன்று வழங்கிய விருது!

புதுடில்லி பிரகதி மைதானத்தில் 20.11.2023 அன்று நடைபெற்ற உலக உணவுத் திருவிழாவில் – பிரதமர் உணவு பதப்படுத்தும் குறு, சிறு நிறுவனங்களின் சிறந்த செயல்திறனுக்காகத் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட விருது!

திருவைகுண்டம் அணைக்கு கட்டமைப்புக்காக 21.11.2023 அன்று வழங்கப்பட்ட பன்னாட்டு நீர்ப்பாசனம் உலகப் பாரம்பரிய நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் ஆணைய விருது!

புதுடில்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திக்கு 30.1.2024 அன்று வழங்கப்பட்ட தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்ற விருது!

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தேசிய அளவில் ஒட்டுமொத்த சிறந்த செயல்திறன் கொண்ட தருமபுரி சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு 14.8.2024 அன்று வழங்கிய முதல் பரிசு!

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்காக அய்.நா.அமைப்பின் 2024ஆம் ஆண்டிற்கான யுனைடெட் நேஷன், இண்டர்ஏஜென்சி டாஸ்க் (united Nation Interagency Task Force Award Smart Porche Award) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு வழங்கிய விருது!

அய்.நா. பிரகடனப்படி தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கிகளுக்கு இந்திய அளவில் சிறந்த வங்கிச் சேவைக்காக 26.11.2024 அன்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தமிழ்நாடு கூட்டுற வுத்துறைக்கு வழங்கிய விருது!

29.11.2024 அன்று புது டில்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்ற 43 ஆவது இந்தியப் பன்னாட்டு வர்த்தகக் கண்காட்சியின், “2047-இல் இந்தியா” என்ற கருப்பொருள் விளக்கக் காட்சிப்படுத்தலைச் சிறப்பாக அமைத்தமைக்காக தமிழ்நாடு அரங்கிற்கு வழங்கப்பட்ட மூன்றாம் விருது !

திருவாரூர் முத்துப்பேட்டை காவல் நிலையம், 2024-ஆம் ஆண்டில் சிறந்த காவல் நிலையம் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் வழங்கிய விருது.

25.4.2025 அன்று 2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஒருங்கிணைந்த நீர்வள மேலாண்மை தேசிய விருது!

பல்வேறு நிறுவனங்கள் –
பத்திரிகைகளின் விருதுகள்!

இவைபோல, ஒன்றிய அரசு வழங்கிய பல்வேறு விருதுகளுடன் தேசிய அளவிலும் மாநில அளவிலும் உள்ள பல்வேறு நிறுவனங்கள் ‘திராவிட மாடல்’ அரசின் நிர்வாகத் திறனைப் பாராட்டிப் பல விருதுகளை வழங்கியுள்ளன. இவைமட்டுமல்லாமல் பல்வேறு பத்திரிகை நிறுவனங்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ‘திராவிட மாடல்’ ஆட்சியைப் பாராட்டி மிகப்பல விருதுகளை வழங்கியுள்ளன.

‘திராவிட மாடல்’ அரசு காலத்தில் நிகழ்த்தப்பட்டுள்ள மகத்தான சாதனைகளுக்காக இதுவரை இந்தியாவில் எந்த முதலமைச்சரும் பெற்றிராத வண்ணம் திசையெட்டும் போற்றிப் பாராட்டும் வகையில், ஒன்றிய அரசும், பல்வேறு நிறுவனங்களும், பத்திரிகைகளும் பாராட்டி வழங்கியுள்ள விருதுப் பட்டியலைக் காணும்போது திராவிட நாயகர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மிகச் சிறந்த நிர்வாக ஆளுமைமிகுந்தவர் எனப் பலரும் மகுடம் சூட்டு வது நமது தமிழ்நாட்டிற்குக் கிடைத்துள்ள தனிப் பெரும் சிறப்பாகும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *