கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 7.4.2026

2 Min Read

கவனத்திற்குரிய
முக்கிய செய்திகள்

7.4.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* எடப்பாடி ஆட்சியில் நடந்த சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் 9 காவல்துறையினருக்கு தூக்கு: மதுரை நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு; சொத்துகளை பறிமுதல் செய்து ரூ.1.2 கோடி இழப்பீடு தரவும் ஆணை.

* மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் காரணமாக மேற்கு வங்கத்தில் நிராகரிக்கப்பட்ட வாக்காளர்களில் 59 லட்சம் பேரின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டதாக அறிவிப்பு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்பட்ட தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி நீக்க தீர்மானம் தள்ளுபடி: நாடாளுமன்ற செயலகம் அறிவிப்பு. மக்களவை தலைவர் ஓம் பிர்லா மற்றும் மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் அறிவிக்கையை நிராகரித்து உள்ளனர்.

தி இந்து:

* 30 மாதங்களுக்கு பின் விழித்துக் கொண்ட பிரதமர்: மகளிர் இட ஒதுக்கீடு சட்ட திருத்தத்தை மோடி தேர்தல் ஆதாயங்களுக்காக பயன்படுத்துகிறார்,காங்கிரஸ் குற்றச்சாட்டு. பெண்களுக்கான இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை அமல்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடி “திடீர் பல்டி” (U-TURN) அடித்துள்ளதாக குற்றம் சாட்டிய காங்கிரஸ் கட்சி, பல மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக, தேர்தல் ஆதாயங்களைப் பெறுவதற்காக பிரதமர் மோடி இப்பிரச்சினையை பயன்படுத்த முயல்வதாக குற்றச்சாட்டு.

தி டெலிகிராப்:

* பாஜக ஆளும் அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு மீது சிபிஅய் விசாரணைக்கு உத்தரவிட்டு உச்சநீதிமன்றம் அதிரடி! தனது குடும்பத்தினருக்கு தொடர்புடைய நிறுவனங்களுக்கு ரூ.1,270 கோடி அரசு ஒப்பந்தங்களை அவர் வழங்கியதாக எழுந்துள்ள புகார்கள் குறித்து முதற்கட்ட விசாரணை நடத்தி, 16 வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* ‘நீங்கள் பதவி விலக வேண்டும்’: கொல்கத்தா மீது தாக்குதல் நடத்தப்போவதாக பாகிஸ்தான் விடுத்த மிரட்டல் குறித்து பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது  குறித்து மம்தா கடும் தாக்குதல்

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *