வேட்புமனுவை நிரப்பாமல் கொடுத்த சிறீவைகுண்டம் தொகுதி தவெக வேட்பாளர் திருப்பி அனுப்பிய அதிகாரி!

1 Min Read

சிறீவைகுண்டம், ஏப்.7- தூத்துக்குடி மாவட்டம் சிறீவைகுண்டம் தொகுதி தவெக வேட்பாளர் தனது வேட்புமனுவை பூர்த்திசெய்யாமல் கொண்டு வந்து தேர்தல் நடத்தும் அலுவரிடம் கொடுத்ததால், அந்த வேட்புமனுவை அவரிடமே திருப்பி கொடுத்து வீட்டுக்கு அனுப்பிய சம்பவம் அரங்கேறி உள்ளது.

எலி படத்தில் வங்கிக்கு கொள்ளையடிக்க தங்கள் சகாக்களோடு செல்லும்  நடிகர் வடிவேலு தப்பும் தவறுமாக விண்ணப்பம் எழுதி கொடுத்திருப்பதாக கூறி வங்கி மேனேஜர் அவரை சரியாக எழுதி கொண்டுவரும்படி திருப்பி அனுப்புவார்

அதனையொட்டிய ஒரு  நிஜ சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் சிறீவைகுண்டத்தில் அரங்கேறியுள்ளது. சிறீவைகுண்டம் தவெக வேட்பாளராக கேரளாவில் லாட்டரி சீட்டு முகவராகவும் நாகர்கோவிலை பூர்வீகமாக கொண்ட அன்னை சரவணன் என்பவர் களமிறக்கப்பட்டுள்ளார். அவர் வேட்புமனுவை தாக்கல் செய்ய தங்களது ஆதரவாளர்கள் 5 பேருடன் சிறீவைகுண்டம் வட்டாச்சியர் அலுவலகத்திற்கு வந்தார்

அலுவலகத்திற்குள் உள்ளே நுழைந்தது முதலே காவல் துறையினரைக் கண்டதும் சற்று பதட்டத்துடன் காணப்பட்டார் வேட்பாளர் சரவணன். அங்கிருந்த தேர்தல் நடத்தும் அலுவலரான செந்தில்வேல் முருகனிடம் வேட்புமனுவை கொடுப்பது போல போட்டோவுக்கு போஸ் எல்லாம் கொடுத்தார்.

வேட்புமனுவை வாங்கி பார்த்த தேர்தல் நடத்தும் அதிகாரி அதிர்ச்சி அடைந்தார். காரணம் அந்த மனுவில் எந்த ஒரு தகவலும் நிரப்பபடாமல் காலியாகவே இருந்தது. வேட்பாளரின் கையெழுத்து கூட போடப்படவில்லை, உடனடியாக அந்த மனுவை அப்படியே சரவணனிடம் திருப்பிக் கொடுத்து முழுமையாக நிரப்பிக் கொண்டு வருமாறு தெரிவித்தார்

“ சார், டாக்குமெண்ட் ஏதாச்சும் இணைக்க வேண்டுமா… என்றும்,  “3 நிமிட வேலை கொஞ்சம் நிரப்பி கொடுங்க சார்…”  என்றும் அவரது ஆதரவாளர் ஒரு அதிகாரியிரம் சிபாரிசு செய்தார், அதற்கு,  “மாலை 3 மணி வரை இங்கே தான் இருப்பேன் போய் ஒழுங்கா நிரப்பி கொண்டு வாருங்கள்” என்று அவர்களை வீட்டுக்கு திருப்பி அனுப்பினார் அந்த அதிகாரி

இதையடுத்து வந்த வேகத்திலேயே சுவற்றில் அடித்த பந்தாக திரும்பிச்செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டார் தவெக வேட்பாளர் சரவணன்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *