சென்னை. ஏப்.6- மேலூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விசுவநாதன் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்துள்ளது.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்தது. மதுரை மாவட்டம் மேலூர் தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், மேலூர் தொகுதிக்கு வேட்பாளரை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. அங்கு விஸ்வநாதன் போட்டியிடுவார் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்து உள்ளார். இவர் காஞ்சிபுரம் தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.
பாலியல் தொல்லை கொடுத்த த.வெ.க. வேட்பாளர்
நீதிமன்றத்தில் பெண் மனு!
சென்னை, ஏப்.6- பெண் நிர்வாகிக்குப் பாலியல் தொல்லை அளித்த வழக்கில் பூந்தமல்லி தொகுதி த.வெ.க. வேட்பாளர் பிரகாசத்துக்கு வழங்கப்பட்ட முன் பிணையை ரத்து செய்யக்கோரி பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மகளிர் அணி நிர்வாகி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, தனக்கு முன்பிணை வழங்க கோரி பிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

