கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களின் சொத்துகளைப் பிடுங்க சட்டம் கொண்டு வருவதா?- ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு பி.வில்சன் எம்.பி. கடும் கண்டனம்

3 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஏப்.6 – கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களின் சொத்துகளைப் பிடுங்க ஒன்றிய பா.ஜ.க. அரசு சட்டம் கொண்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது’’ என்று மூத்த வழக்குரைஞரும், தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினருமான பி.வில்சன் கூறியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மூத்த வழக்குரைஞரும், தி.மு.க. மாநிலங்க ளவை உறுப்பினருமான பி.வில்சன் நேற்று (5.4.2026) அளித்த பேட்டி வருமாறு:–

ஏற்கெனவே இஸ்லாமிய நண்பர்களுக்கு வக்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அவர்களின் சொத்துகளை அடித்துப் பிடுங்கிய பா.ஜ.க., இப்பொழுது கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களின் சொத்துகளை அடித்துப் பிடுங்குவதற்கு எப்.சி.ஆர்.ஏ. என்ற கொடூரமானச் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.

ஒரு பள்ளியையோ, கல்லூரியையோ, மருத்துவமனையையோ அல்லது ஆதர வற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களையோ நடத்துவதில் என்ன தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கப் போகிறது? இந்தக் கொடூரமானச் சட்டத்தை எதிர்த்து, முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். இந்தச் சட்டம் நிறை வேற்றப்பட்டால் அடுத்த நிமிடமே ஆதர வற்றோர் இல்லங்கள். கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் அனைத்தும் அரசுக்குச் சொந்தமாகி விடும். 2020 இல் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் மூலம் 20,000–க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன; ஒரே நேரத்தில் 2,500 கிறிஸ்துவத் தொண்டு நிறுவனங்களின் உரி மங்கள் புதுப்பிக்கப்படாமல் முடக்கப்பட்டன. இதை எதிர்த்து வழக்குப் போட்டாலும் அவர்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்காமல் தடுத்தார்கள்.

என்ன தீவிரவாதத்தைப் பார்த்துவிட்டார்கள்?

இப்பொழுது இந்தச் சட்டத்தின் மூலம் உரிமம் இல்லாத நிறுவனங்களின் சொத்துகள் அடுத்த நொடியே ஒன்றிய அரசுக்குச் சென்றுவிடும். இது நாளைக்கு கிறிஸ்த வர்களின் தனிப்பட்ட சொத்துகளையும் எடுக்கும் அளவிற்குச் செல்லும் என்பதையே காட்டுகிறது. இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் சொத்துகளைப் பறிப்பதன் மூலம் நாட்டில் பிரிவினை வாதத்தை உண்டாக்கி, மற்றவர்களின் சொத்துகளைக் கொள்ளையடிப்பதே இவர்களின் எண்ணம்.

அரசு செய்ய முடியாத மக்கள் நலப்பணி களை 50 ஆண்டுகளுக்கும் மேலாகச் செய்து வரும் இந்த நிறுவனங்களில் இவர்கள் என்ன தீவிரவாதத்தைப் பார்த்துவிட்டார்கள்? இந்த மசோதாவின்படி, பறிக்கப்படும் சொத்துகளை ஏலம் விடலாம் என்றும், அப்படி ஏலம் விடப்பட்டால் அந்தச் சொத்தைப் பற்றி நீங்கள் எதுவுமே கேட்க முடியாது என்றும் சொல்லப்பட்டுள்ளது. இவ்வாறு எடுக்கப்படும் சொத்துகள் இந்தியாவிலுள்ள இரண்டு, மூன்று பணக்காரர்களிடமே போய்ச் சேருகின்றன.

நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதால் தற்போது இது விவாதத்திற்கு வரவில்லை என்றாலும், மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், எப்போது வேண்டு மானாலும் கொண்டு வரப்படலாம். குறிப்பாகக் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள்  ‘தவக்கால’த்தைக் கடைப்பிடித்து வரும் இந்த நேரத்தில், ஈஸ்டர் மற்றும் ‘புனித’ வெள்ளிக்கு இடைப்பட்ட காலத்தில், இத்தகைய மசோதாவைக் கொண்டு வந்து மக்களைப் பயமுறுத்துவது தேவையற்ற செயலாகும்.

தி.மு.க. இதனை நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்க்கும். இது ஒருபுறமிருக்க, ‘ஜன் விசுவாஸ்’ என்ற மற்றொரு திருத்தச் சட்டத்தின் மூலம் 80 ஒன்றிய அரசு சட்டங்கள் திருத்தப்பட்டு, 717 குற்றங்களுக்கான தண்ட னைகள் குறைக்கப்பட்டு உள்ளன. முன்பு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றங்க ளுக்கு இப்போது வெறும் அபராதம் (Penalty) கட்டினால் போதும் என்று மாற்றியுள்ளனர்.

இந்தச் சட்டங்கள் அனைத்தும் கார்ப்ப ரேட் நிறுவனங்களுக்குச் சாதகமாகவே உரு வாக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகள் பணத்தைக் கட்டிவிட்டு “ஒயிட் காலர் மனிதர்களாக உலவ’’ இது வழிவகுக்கும்.

இவ்வாறு மூத்த வழக்குரைஞரும், தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினருமான பி.வில்சன்  கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *