அ.தி.மு.க.வுக்கு எதிரான ஆதாரத்தை வெளியிட்ட தே.மு.தி.க.! எங்களை சிறுமைப்படுத்தும் இபிஎஸ்! பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு! ‌

1 Min Read

சென்னை, ஏப்.6- தே.மு.தி.க. தலைவர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது நேற்று (5.4.2026) கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

2024 மக்களவைத் தேர்தலின் போது போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி மாநிலங்களவை (ராஜ்யசபா) உறுப்பினர் பதவி தருவதாகக் கூறிவிட்டு, தற்போது அதிமுக தலைமை அதை மறுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “கடந்த 2024-ஆம் ஆண்டு அதிமுக – தேமுதிக கூட்டணி அமைக்கப்பட்ட போது, தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படுவதாக முறைப்படி ஒப்பந்தம் கையெழுத்தானது. 2025-இல் இந்த இடத்தை வழங்குவதாக எடப்பாடி பழனிசாமி உறுதியளித்திருந்தார். ஆனால், தற்போது அப்படி ஒரு வாக்குறுதியைத் தரவே இல்லை என அவர் பொய் பேசி வருகிறார். இதோ அதற்கான ஆதாரப்பூர்வமான ஒப்பந்த நகல் என்று கூறி ஒப்பந்த கடிதத்தை ஊடகங்களிடம் காண்பித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “தேமுதிகவை அரை சதவீத (0.5%) வாக்குகள் மட்டுமே கொண்ட கட்சி என எடப்பாடி பழனிசாமி விமர்சிப்பது அரசியல் நாகரிகம் கிடையாது. எங்களைச் சிறுமைப்படுத்திப் பேசும் அவர், வரும் மே 4-ஆம் தேதிக்குப் பிறகு தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) செல்லும் நிலைக்குத் தள்ளப்படுவார்,” என ஆவேசமாகத் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *