டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* என்.டி.ஏ. ஆட்சியில் பீகார் அனைத்துத் துறைகளிலும் பின் தங்கி உள்ளது, தேஜஸ்வி கடும் குற்றச்சாட்டு.
* தேர்தல் ஆணையம் நடுநிலை தவறாமல் செயல்பட வேண்டும், உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா பேச்சு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* தொகுதி மறுசீரமைப்பு குறித்து மாநில அரசுகளோடு ஒன்றிய அரசு விவாதித்து முடிவு எடுக்க வேண்டும், தலையங்கம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ‘விகிதாசார தொகுதி மறுவரையறை’ என்பது ஒரு மக்கள் தொகையியல் சதி: கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம். நாளிதழுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், தென்னிந்திய மாநிலங்கள் தங்கள் தற்போதைய நாடாளுமன்ற இடங்களை “இழக்காது” என்று பிரதமர் நரேந்திர மோடி அளித்த உறுதிமொழி, ஓர் ஆழமான அநீதியை மறைக்கும் வகையிலான, ‘வார்த்தை ஜாலங்கள் நிறைந்த ஒரு தந்திரமான உத்தி’ என்று முதலமைச்சர் விஜயன் குற்றச்சாட்டு.
தி ஹிந்து:
* நாடாளுமன்றத்தில் இட ஒதுக்கீடு சட்டம் குறித்து விவாதிக்கும் முன் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துங்கள். இட ஒதுக்கீட்டின் அடிப்படை என்பது மொத்த இடங்களில் மூன்றில் ஒரு பங்கு என்பதாகும்; இது முழுக்க முழுக்க எண்களைச் சார்ந்த ஒரு கணிதவியல் சார்ந்த பிரச்சினையாகும். இந்த எண்கள் என்பவை மக்கள் தொகை தரவுகளிலிருந்து பெறப்பட வேண்டும்; அந்தத் தரவுகள் மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலமே கிடைக்கப்பெறும். பெண்களின் மக்கள் தொகையை தீர்மானிக்க, 2011-ஆம் ஆண்டின் பழைய தரவுகளே பயன்படுத்தப்பட்டால், அந்த இட ஒதுக்கீட்டின் அடித்தளமே தவறானதாகிவிடும்” என அகிலேஷ் விமர்சனம்.
தி டெலிகிராப்:
* ‘ரயில் நீர்’ ஊழல் விவகாரத்தில் தகவல் அறியும் உரிமை மறுப்பு: ரயில்வே நிர்வாகம் மீது (IRCTC) மத்திய தகவல் ஆணையம் கண்டனம். ‘ரயில் நீர்’ (RAIL NEER) ஊழல் என்பது 2015-ஆம் ஆண்டில் சிபிஅய் (CBI) அமைப்பால் விசாரிக்கப்பட்ட ஓர் ஊழல் வழக்காகும். இதில், உயர்தர ரயில்களில் (ராஜ்தானி மற்றும் சதாப்தி) விநியோகிக்கப்பட வேண்டிய, கட்டாயமாக்கப்பட்ட ‘ரயில் நீர்’ பாட்டில் குடிநீருக்குப் பதிலாக, தனியார் கேட்டரிங் நிறுவனங்கள் மலிவான பாட்டில் குடிநீரை விநியோகித்தன; இதனால் இந்திய ரயில்வே துறைக்கு சுமார் ரூ. 19.5 கோடி இழப்பு ஏற்பட்டது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* தேர்தல் நேரத்தில் நாடாளுமன்றத்தை கூட்ட ஒன்றிய அரசு எடுக்கும் நடவடிக்கை – ‘சதி நோக்கம் கொண்டது; எதிர்க்கப்பட வேண்டும்’: சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் காலத்தில், தமிழ்நாடு, மேற்கு வங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாமல் தடுக்கவே, இந்த ஏற்பாடு என சிதம்பரம் குற்றச்சாட்டு.
– குடந்தை கருணா
