மனிதன் சாகின்றவரை ஏழை மனிதனாகவே இருந்து செத்தாலும் நாணயம் நம்பிக்கை உடையவனாக இருந்தால் மதிக்கப்படுவான், போற்றப்படுகின்றான். பெரிய மனிதனாக இருந்தாலும் நாணயம், நம்பிக்கை பொறுப்பு உடையவனாக இருந்து செத்தால்தான் மரியாதை பெற முடியும். என்றென்றைக்கும் பிறரை ஏமாற்றாமல் நாணயமாக நடப்பவனுக்கு எப்போதுமே ஒரு முதலிடம் உண்டு. உண்மையாக நாணயமாக நடப்பவனுக்கு மக்கள் நெஞ்சத்தில் ஒரு சிறந்த இடம் உண்டு, அய்யம் என்ன?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
