ஒசூரில் பெரியார் சதுக்கம் பெயர் சூட்டலுக்கு தமிழ்நாடு அரசுக்கு வரவேற்பும் – பாராட்டும்

3 Min Read

பா.ஜ.க. சங் பரிவாரங்களுக்கு கண்டனம்

அரசியல்

ஒசூர்,ஏப்.6- ஒசூர் உள்வட்ட சாலையுடன் முனிஸ்வர்நகர்,வஉசி நகர் இணையும் சந்திப்புக்கு பெரி யார் சதுக்கம் என பெயரிட்ட தமிழ்நாடு அரசுக்கு நன்றி, பாராட் டுகள் தெரிவித்தும், பெரியார் பெயரை வைக்க கூடாது என மதவெறியைத் தூண்டி, அரசியல் ஆதாயத்திற்க்காக தவறான சட் டத்திற்கு புறம்பாக ஆர்பாட்டம் நடத்திய பி.ஜே.பி. -சங்பரிவார் அமைப்புகளை கண்டித்தும் ஜன நாயக அமைப்புகளை ஒருங்கி ணைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒசூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் எம்.ராமசந் திரன்     தலைமை யில் ஆர்ப்பாட்டம் (28.3.2023) நடை பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கழக மாவட்ட  தலைவர் சு.வனவேந்தன் தொடக்கவுரையாற்றினர்.

தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகர தலைவர் தியாக ராஜன்,மக்கள் அதிகாரம் சார்பில் ரவிச்சந்திரன், எஸ்டிபி கட்சி சார் பில் மாவட்ட தலைவர் ஷான வாஸ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஜாகீர் ஆலம், தமிழ் தேச குடியரசு இயக்கம் சார் பில் மாவட்ட செயலாளர் விக் னேஷ், மனிதநேய ஜனநாயக கட்சி தலைமை செற்குழு உறுப்பினர் நவ்ஷாத், விடுதலை சிறுத்தை கட்சி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பு.மு.மாய வன், மண்டல செய்லாளர் பொ.மு. நந்தன், நாடாளுமன்ற செயலாளர் செந்தமிழ், கழக மாநில அமைப்பு செயலாளர் ஊமை ஜெயராமன், இறுதியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் கி.கோவேந்தன் ஆர் பாட்ட சிறப்புரையாற்றினர்.

அவர்பேசும் போது, அரசு தன் நிலைப்பாட்டின்படி சம்பந்தப் பட்ட இடத்திற்கு பல் கோணத்தில் ஆய்வு செய்து முறையாக பெயர் வைத்திட வேண்டி ஒசூர் மாமன்ற ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில் பெரியார் பெயரை வைக்கக் கூடாது என அனுமதி யின்றி ஆர்ப்பாட்டம் செய்தவர் களை கைது செய்திருக்க வேண்டும். 

கருநாடகவில் பெரியார் நகர் வைத்துள்ளனர், சட்டமன்றம் முன்பு அண்ணல் அம்பேத்கர் சிலை வைத்துள்ளனர் தமிழ் நாட்டின் நுழைவாயில் ஒசூர் ஆகும். ஒசூரில் தமிழ்நாட்டின் தலைவர் தந்தை பெரியார் அவரது பெயரை தாங்கி தந்தைபெரியார் சதுக்கம் என பெயரிட ஆணையிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், ஒசூர் மாநகராட் சியில் தீர்மானத்தை நிறைவேற்றி தந்திட்ட ஒசூர் மேயர் எஸ்.ஏ.சத்யா அவர்களுக்கும் விடுதலை சிறுத் தைகள் கட்சி சார்பிலும், ஒசூர் பொது மக்கள் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் விரை வில் ஒசூர் சட்டமன்ற உறுப்பி னரும், திமுக மாவட்ட செயலாள ருமான தோழர் பெரியார் சதுக்கம் பெயர் பலகை திறப்பு நிகழ்ச்சியை பெரிய விழாவாக கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்து நடத்திட வேண் டும்.

அதேபோன்று விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் இந்த ஆர்ப்பாட்டத்தின் வழியாக தமிழ் நாடு முதலமைச்சருக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறோம் பெரியார் சதுக்கத்தில் விரைவில் முழு உருவ பெரியார் சிலை வைத்திட வேண்டுகிறோம்” என்று பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திரா விடர் கழக மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி, பொதுகுழு உறுப் பினர் அ.செ.செல்வம், தொழிலா ளரணி மாவட்ட தலைவர் பா.வெற்றிசெல்வன், செயலாளர் தி.பாலகிருஷ்ணன், ஒன்றிய அமைப்பாளர் து.ரமேஷ், பகுத்தறி வாளர் கழக மாவட்ட துணைச் செயலாளர் ஜெயசந்தர், காங்கிஸ் கட்சி மாவட்ட தலைவர் முரளி தரன், கீர்த்திகணேஷ், நீலகண்டன், விவசாய அணி சூரிய கணேஷ், விடுதலை சிறுத்தை கட்சி ஒசூர் மாநகர செயலாளர் ஜிபி.கிருஷ் ணன், ஊடக பொறுப்பாளர் இளையராஜா, நகர துணைச் செய லாளர் ந.மு.ராஜகோபால், நகர பொறுப்பாளர் நாகராஜ், ஒன்றிய துணைச் செயலாளர் மாரப்பா, மலர்மன்னன், வழக்குரைஞர் சரண்ராஜ், மகளிரணி ராஜேஸ்வரி, புவனேஸ்வரி, சசி, லட்சுமி மேலும் ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற்ற கட்சி அமைப்புகளின் தொண் டர்கள் திரளாக கலந்து கொண் டனர்.

பெரியார் சதுக்கம் பற்றிய விளக்க துண்டறிக்கை பொதுமக்க ளிடம் வழங்கப்பட்டது.

இறுதியாக ஒசூர் மாநகர தொண்டரணி அமைப்பாளர் கே.ஆர்.சூரியவளவன் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *