சென்னை, ஏப். 5- பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்வது குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை அரசுத் தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப் பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ் வழியில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் தமிழ் வழி விடைத்தாள்களையும், ஆங்கில வழியில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் ஆங்கில வழி விடைத்தாள்களையும் மட்டுமே மதிப்பீடு செய்ய வேண்டும். இந்த விதியை எக்காரணம் கொண்டும் மீறக்கூடாது.
அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு பாடம் எடுக்கும் தகுதி வாய்ந்த அனைத்து ஆசிரியர்களையும் மதிப் பீட்டுப் பணிக்கு அனுப்பி வைக்க வேண்டும். எந்த வொரு பள்ளியிலிருந்தும் ஆசிரியர்கள் விடுபடாத வண்ணம் கண்காணிக்கப்பட வேண்டும்.
விடைத்தாள் மதிப் பீட்டுப் பணியை குறிப் பிட்ட நாட்களுக்குள் தாமதமின்றி முடிக்கத் தேவையான ஆசிரியர்களின் எண்ணிக்கையை பாட வாரியாகவும், பயிற்று மொழிவாரியாகவும் கணக்கிட்டு அவர்களை உடனடியாகப் பணி விடுப்பு செய்ய வேண்டும். மதிப்பீட்டுப் பணிக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான நியமன ஆணைகளை ஏப்ரல் 9-ஆம் தேதிக்குள் தவறாமல் வழங்க வேண்டும் என்று அந்தச் சுற்றறிக்கையில் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இந்த நடைமுறைகளை முறையாகப் பின்பற்றி, பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளைத் தொய்வின்றி முடிக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
10-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஆசிரியர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்கம் முக்கிய உத்தரவு!
Leave a Comment
