அந்தோ பரிதாபம் த.வெ.க.! நிர்வாகிகள் தேர்தல் பணிகளை புறக்கணித்ததால் தனியாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட திருத்தணி த.வெ.க. வேட்பாளர்

1 Min Read

திருத்தணி, ஏப்.4- த.வெ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் தேர்தல் பணிகளை புறக்கணித்ததால், திருத்தணி த.வெ.க. வேட்பாளர் சத்யகுமார் தன்னந்தனியாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
திருத்தணி சட்டப் பேரவை தொகுதி வேட்பாளரான, த.வெ.க. தேசிய செய்தி தொடர்பாளர் சத்யகுமார், சில நாட்களுக்கு முன் திருத்தணி நகருக்கு வந்தார். அப்போது ஆர்வத் துடன், தொகுதியின் கட்சி நிர்வாகிகள் சத்யகுமாரை சந்திக்க வந்தனர்.
அப்போது வேட்பாளர் சத்யகுமார், நிர்வாகிகளை மதிக்காமல் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப் படுகிறது. இதனால் சத்யகுமார் மீது அதிருப்தியில் இருக்கும் தொகுதியை சேர்ந்த த.வெ.க. நிர்வாகிகள், சத்யகுமாரை மாற்றி வேறு வேட்பாளரை கட்சி தலைமை அறிவிக்க கோரி, தேர்தல் பணிகளை புறக்கணித்து வருகின்றனர்.
த.வெ.க. வேட்பாளர் சத்யகுமார் வேட்பு மனு தாக்கல் செய்ய எதிர்ப்பு தெரிவித்து, திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகம் அருகே சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் 50-க்கும் மேற்பட்ட த.வெ.க.வினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் (2.4.2026) மதியம் 2.45 மணியளவில் த.வெ.க. வேட்பாளர் சத்யகுமார், மாவட்ட செயலாளர் டில்லிபாபு மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை கூட அழைத்து செல்லாமல் தனியாக திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், த.வெ.க. வேட்பாளர் சத்யகுமார் நேற்று (3.4.2026) திருத்தணி நகரில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் இல்லாமல் தன்னந்தனியாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது, அவர் பைபாஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தனியாக நடந்து சென்று, தேநீர் கடைகள், பெட்ரோல் பங்க் மற்றும் சாலையில் நடந்து சென்றவர்களிடம் விசில் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்தார். இதனால், திருத்தணியில் பரபரப்பு ஏற்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *