தேனி, ஏப். 4- தேனி பாரஸ் சாலை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 49) ஊறுகாய் தயா ரித்து விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி ஜான்சிராணி (37), எம்.பி.ஏ. பட்டதாரி. இந்த இணையருக்கு 3 மகள்களும், 2 வயதில் தனிஷ் என்ற ஆண் குழந்தை யும் உள்ளனர். ஜான்சிராணி கடந்த சில மாதங்களாக தனது மகன் பிறந்த நேரம் சரியில்லை என்றும், யாரோ தன்னை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள் என்றும் கணவரிடம் கூறி வந்துள்ளார். மேலும் குழந்தையை ஆசிரமத்தில் சேர்க்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.
கொல்ல முயற்சி
இந்தநிலையில் கடந்த 31ஆம் தேதி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குழந்தையுடன் இருந்த ஜான்சிராணி, குழந்தையை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி, கயிற்றால் குழந்தையின் கழுத்தை இறுக்கினார். குழந்தை அசைவின்றி இருந்ததால் இறந்துவிட்டதாக நினைத்த அவர், தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.அந்த நேரத்தில் குழந்தைக்கு திடீரென மூச்சு வந்து வலிப்பு ஏற்பட்டது. அப்போது வீட்டுக்கு வந்த வெங்க டேசன் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, உட னடியாக குழந்தையை சிகிச்சைக்காக தனியார் மருத்து வமனைக்கு கொண்டு சென்றார். பின்னர் மேல் சிகிச்சைக் காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வழக்குப்பதிவு
இந்த சம்பவம் குறித்து வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில், ஜான்சிராணிமீது தேனி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் மன அழுத்தம் காரணமாக இந்த செயலில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது. காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

