72 முஸ்லிம்கள் படுகொலை விவகாரம் குற்றம் சாட்டப்பட்ட 39 பேரையும் விடுதலை செய்தது மீரட் நீதிமன்றம்

2 Min Read

அலகாபாத் ஏப்,7- கடந்த 1987-ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தின் ஹாசிம்புரா மற்றும் மலி யானா கிராமங்களில் இந்துத் துவா அமைப்பினர்  72 முஸ்லிம்களை படுகொலை செய்த விவகாரத்தில் குற்றம் சாட்டப் பட்ட 39 பேரையும் மீரட் நீதி மன்றம் விடுதலை செய்துள்ளது. 

உத்தரப்பிரதேசத்தின் ஹாசிம்புரா மற்றும் மலியானா கிராமங்களில் கடந்த  1987-ஆம் ஆண்டு மே 18 முதல்  23-ஆம் தேதி வரை 5 நாட்களாக முஸ்லீம் மக்களுக்கு எதிராக  இந்துத்துவா அமைப்பினர் கொடூரமான வன்முறை யை அரங்கேற்றினர். இந்த வன் முறையில் இந்துத்துவா அமைப் பினரோடு மாநில காவல் துறையும், கலவரத்தை  கட்டுக் குள் கொண்டுவர அனுப்பி வைக்கப்பட்ட துணை ராணுவப் படையும் கைகோர்த்துக் கொண்டன. இந்த காட்டு மிராண்டித்தனமான நரவேட் டையில் சுட்டுக் கொல்லப்பட் டும், தீயிட்டு எரிக்கப்பட்டும்  72 முஸ்லிம்கள் படுகொலை செய் யப்பட்டனர்.  இந்த வழக்கை விசாரித்து வந்த மீரட் நீதிமன்றம் 4.4.2023 அன்று (ஏப்.4) தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில்,”மலியானா படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 39 பேருக்கு எதிராக போதிய  ஆதாரம் இல் லாத காரணத்தால் அவர்கள் விடு தலை செய்யப்படுவதாக” மீரட் நீதிமன்ற கூடுதல் மாவட்ட நீதிபதி லக்விந்தர் சூட் அறிவித்தார். இந்த தீர்ப்பு பாதிக்கப் பட்ட முஸ்லிம் மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக முஸ்லிம் மக்கள் தரப்பில் ஆஜரான வழக் குரைஞர் “சாட்சிகளின் வாக்கு மூலங்கள் மற்றும் உடற்கூராய்வு அறிக்கைகளில் இருந்து உறுதி யான ஆதாரங்கள் அனைத் தையும் கேட்காமல் குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதி மன்றம் விடுவித்துள்ளது” குற்றம் சாட்டினார். 800 முறை ஒத்திவைப்பு கடந்த 35 ஆண்டு களாக மீரட் நீதி மன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கு 800 முறை ஒத்திவைக்கப்பட்டது. 61 சாட்சிகளில் 14 சாட்சிகளின் வாக்கு மூலம் மட்டுமே பதிவு செய்யப்பட்டது. மேலும் அல காபாத் உயர்நீதிமன்றத்தில் ஓய்வுபெற்ற நீதிபதியாக இருந்த குர் சரண் லால் சிறீவஸ்தவாவின் மேற்பார்வை யிலான குழு, ஒரு வருட விசாரணைக்கு பிறகு அறிக்கையை சமர்ப்பித்தது. ஆனால் இந்த அறிக்கையை பொதுக் களத்திற்கு கொண்டு வரவில்லை.

இதனிடையே பாதிக்கப் பட்டவர்கள் சார்பில் வழக்கு தொடர்ந்த அலாவுதீன் சித்திக் அளித்துள்ள பேட்டியில், “விசா ரணை நடவடிக்கைகள் இன் னும் தொடர்ந்து கொண்டிருக் கும்போது நீதிமன்ற உத்தரவு  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 36 உடற்கூராய்வு அறிக்கைகள் மற்றும் காய மடைந்தவர்களின் மருத்துவ ஆவணங் கள் நீதிமன்றத்தில் இருந்தன. இதில் 34  உடற்கூராய்வுகள் மீதான விசாரணையே நடைபெற வில்லை. குற்றம் சாட்டப்பட்ட வர்களை சிஆர்பிசி-யின் பிரிவு 313 இன் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப் படவில்லை. 70 சாட்சியங்கள் இருந்தும் குறைந்த பட்சம் 16 சாட்சிகள் மட்டுமே நீதி மன்றத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர். எனவே, மீரட் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை அணுக உள்ளோம்” என்று கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *