பக்தி – மூடநம்பிக்கை படுத்தும் பாடு முருகன் கோயிலில் 9 எலுமிச்சம் பழங்கள் ரூ.1.43 லட்சத்திற்கு ஏலமாம்!

1 Min Read

திருவெண்ணெய்நல்லூர், ஏப்.4 திருவெண்ணெய்நல்லூர் அருகே முருகன் கோயில் வேலில் சொருகப் பட்ட 9 எலுமிச்சை பழங்கள் 1 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஒட்டனந்தல் கிராமத்தில் இரட்டை குன்றின் மீது ரத்தினவேல் முருகன் கோயில் உள்ளது. கருவறையில் வேல் மட்டுமே உள்ள கோயிலில் பங்குனி உத்திர திருவிழா 9 நாட்கள் நடத்தப்படுவது வழக்கம். விழாவை முன்னிட்டு நடத்தப்படும் ஒன்பது நாட்கள் உற்சவ காலங்களில் தினமும் வேலில் சொருகப்படும் எலுமிச்சை பழங்கள் இடும்பன் பூஜையில் வைத்து பங்குனி உத்திர விழா நாள் அன்று நள்ளிரவு ஏலம் விடப்படும். அதன்படி, நேற்று (3.4.2026) இரவு 11:00 மணிக்கு ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் எலுமிச்சை பழங்கள் ஏலம் விடப்பட்டது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமணமாகாதவர்கள், குடும்பப் பிரச்சினை உள்ளவர்கள், வியாபாரத்தில் நட்டமடைந்தவர்கள் என பலர் பங்கேற்று ஏலம் எடுத்தனர். முதல் நாள் எலுமிச்சம் பழம் 45 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் இரண்டாம் நாள் பழம் 15 ஆயிரம் என 9 எலுமிச்சம் பழங்கள் மொத்தம் 1 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. ஏலத்தில் சென்னை, திருச்சி,புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *