‘கடவுள்’ சக்தி இதுதான்! கோயில் திருவிழாவில் தேர் சக்கரத்தில் சிக்கிய பக்தர் உயிரிழப்பு

2 Min Read

சென்னை, ஏப்.4 மண்ணடி லிங்கிசெட்டி தெருவில் பழமையான மல்லிகேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் தேரோட்டம் கடந்த மாதம் 29ஆம் தேதி நடந்தது. தேரை ஆங்காங்கே நிறுத்துவதற்காக சக்கரத்தின் கீழ் மரத்தடுப்பு கட்டை வைக்கும் பணியில் மண்ணடி புது தெருவை சேர்ந்த குபேந்திரன் (24) என்பவர் ஈடுபட்டிருந்தார்.

தேரின் வலது சக்கரத்தில் தடுப்புக்கட்டை வைத்தபோது எதிர்பாராத விதமாக குபேந்திரன் கீழே விழுந்து தேர் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் ரத்த வெள்ளத்தில் துடித்த குபேந்திரனை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம்  (2.4.2026) குபேந்திரன் பரிதாபமாக பலியானார். மண்ணடியில் மல்லிகேஸ்வரர் கோயில் தேரோட்டத்தின்போது தேர்சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்த வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் ஏப். 9 வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை, ஏப். 4 தமிழ்நாட்டில் ஏப். 9 வரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மய்யம் சாா்பில் நேற்று (3.4.2026) வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

மகாராட்டிரம் மாநிலம், மராத்வாடா முதல் தென் தமிழ்நாடு வரை  உள் கா்நாடகம் வழியாக காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஏப். 4) முதல் 9 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில், சனிக்கிழமை வானம் ஓரளவு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.

தமிழ்நாட்டில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம், சின்னக்கல்லாறு பகுதியில் 70 மி.மீ. மழை பதிவானது. சின்கோனா, வால்பாறை, வால்பாறை வட்டாட்சியா் அலுவலகம் (கோவை)- 50 மி.மீ., உபாசி (கோவை) 30 மி.மீ., சோலையாறு (கோவை), தேக்கடி (தேனி)-10 மி.மீ. மழை பதிவானது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *