பூமியின் வியப்பான காட்சி!
விண்வெளியில் இருந்து பூமியைப் படம் பிடித்த நாசா குழுவினர்
வாசிங்டன், ஏப். 4- நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் லட்சியத் திட்டத்தை அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா மீண்டும் முன்னெடுத்துள்ளது. பல கட்ட சோதனைகளுக்கு பிறகு ஆர்டெமிஸ்-2 திட்டத்தை நாசா வெற்றிகரமாக செயல்படுத்தியது. கனடா நாட்டின் விண்வெளி வீரர் உள்பட 4 வீரர்கள் அடங்கிய இந்த குழுவினர் ஒரு நாள் முழுவதும் பூமியைச் சுற்றி வந்து விண்கலத்தின் உயிர் காக்கும் வசதிகளைச் சோதித்தனர்.
பின்னர், ‘டிரான்ஸ்லூனார் இன்ஜெக்ஷன்’ என்ற என்ஜின் எரிப்பு மூலம் நிலவை நோக்கிச் செலுத்தப் பட்டனர். இவர்கள் நிலவின் மறுபக்கத்தை மிக நெருக்கமாகவும், நேரடியாகவும் காணும் முதல் மனிதர்கள் என்ற சாதனையைப் படைக்க உள்ளனர். இந்த ஒட்டுமொத்த திட்டத்தின் மதிப்பு ரூ.8.64 லட்சம் கோடி ஆகும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் 2028-ல் திட்டமிடப்பட்டுள்ள மனிதர்களின் நிலவுத் தரையிறக்கத்துக்கு (ஆர்டெ மிஸ் 4) ஒரு முன்னோட்டமாக அமையும்.
இதனிடையே, நிலவுக்குச் செல்லும் விண்வெளி வீரர்கள், பூமியைப் பிரிந்து செல்லும் வேளையில் அதன் பிரகாசமான நீல அழகைப் படம்பிடித்துள்ளனர். இந்த புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
குவைத்தில் உள்ள கடல் நீரை
குடிநீராக்கும் ஆலை மீது ஈரான் தாக்குதல்
குடிநீராக்கும் ஆலை மீது ஈரான் தாக்குதல்
குவைத், ஏப். 4- ஈரான் – அமெரிக்கா போர் தொடங்கி 5 வாரங்கள் முடிவடைந்துள்ளன. போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய போதிலும், 2.4.2026 அன்று இருதரப்பும் மாறிமாறி தாக்குதலில் ஈடுபட்டன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீதும், அதன் அருகே உள்ள பகுதிகள் மீதும் வான்வழி தாக்குதல் நடத்தின. ஈரான் கராஜ் நகரில் உள்ள பி1 என்ற பாலம் தகர்க்கப்பட்டது.
பாலத்தின் நடுப்பகுதி பிளவுபட்டதால், அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதேசமயம், வளைகுடா நாடுகள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தியது. குறிப்பாக, குவைத்தில் உள்ள மினா அல்-அஹமதி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியது. அதில், அந்த ஆலை தீப்பற்றி எரிந்தது. நல்லவேளையாக யாரும் காயம் அடையவில்லை. தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
குவைத்தில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் ஆலை மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியது. அதில், ஆலையின் சில பாகங்களுக்கு சேதம் ஏற்பட்ட தாக குவைத் உறுதி செய்துள்ளது.குவைத்தின் 90 சதவீத குடிநீர், கடல்நீரை குடிநீராக்குவதன் மூலம்தான் கிடைக்கிறது. அதனால், மக்களின் வாழ்வாதாரத்தை முடக்கும் வகையில், அந்த ஆலைகள் குறிவைத்து தாக்கப்படுகின்றன. இதுபோல், பஹ்ரைனிலும் ஈரான் தாக்குதல் நடத்தியதால், அதுபற்றி எச்சரிக்க ‘சைரன்’ ஒலி ஒலித்தபடி இருந்தது. சவுதி அரேபியா மீதும் ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியது. ஆனால் அந்த டிரோன்களை அழித்து விட்டதாக சவுதி அரேபியா தெரிவித்தது. இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
அமெரிக்காவின் எப்-35, எப்-15 ரக
போர் விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டோம்
போர் விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டோம்
ஈரான் ராணுவம் தகவல்
டெக்ரான், ஏப். 4- ஈரான் வான் பரப்பில் பறந்த அமெரிக்க விமானப் படையின் எப் -35 மற்றும் எப்- 15 இ ரக போர் விமானங்களை நேற்று (3.4.2026) சுட்டு வீழ்த்தியதாக ஈரான் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கு ஆதாரமாக, போர் விமானங்களின் உடைந்த பாகங்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு உள்ளன. ஆனால் இந்த தகவல்கள் உறுதி செய்யப்பட வில்லை. அமெரிக்க ராணுவமும் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை உறுதி செய்யவில்லை. அமெரிக்க போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டபோது ஒரு விமானி பாராாசூட் மூலம் உயிர் தப்பியதாகக் கூறப்படுகிறது.
அந்த விமானியை ஈரான் ராணுவம் பிடித்தி ருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இதுவும் உறுதி செய்யப்படவில்லை. அமெரிக்க விமானி பிடிபட்டது தொடர்பான நிழற்ப்படமோ, காணொலியோ வெளியிடப்படவில்லை. கடந்த மார்ச் 19ஆம் தேதி அமெரிக்காவின் எப்-35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தினோம். தற்போது இரண்டாவது எப்-35 ரக போர் விமானத்தையும் சுட்டு வீழ்த்தியுள்ளோம் என்று ஈரான் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

