கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 3.4.2026

2 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* இந்தியாவிலேயே ஊழலில் நம்பர் 1 அசாம் முதல்வர் ஹிமந்தா சர்மா: ராகுல் குற்றச்சாட்டு.

* தண்டனை குறைத்து கைதிகளை வெளியிடும் அமைச்சரவையின் தீர்மானத்துக்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டியது அரசமைப்பு சட்டத்தின்படியான கடமை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்த மசோதாக்களை நாடாளுமன்றத்தின் நீடித்த கூட்டத் தொடரில் கொண்டு வர ஒன்றிய அரசு முடிவு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* நாடாளுமன்றம் ஏப்ரல் 16 அன்று 3 நாட்களுக்கு மீண்டும் கூடுகிறது; சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள இந்த நேரத்தில் மசோதாக்களை கொண்டு வரக் கூடாது என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* மோடி எத்தகைய வித்தைகள் செய்தாலும், தமிழ்நாட்டில் பாஜக-வால் காலூன்ற முடியாது: மதிமுக தலைவர் வைகோ பேட்டி.

தி இந்து:

* பீகார் தேர்தல் பிரச்சாரத்தின் போது விடுத்த விமர்சனத்தை, தமிழ்நாட்டுப் பிரச்சாரத்தின் போதும் மீண்டும் கூற பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் சவால். பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தவறாக நடத்தப்படுவதாக குற்றம் சாட்டிய பிரதமரை கடுமையாகச் சாடினார்; மேலும், கோவை மற்றும் மதுரைக்கான மெட்ரோ ரயில் திட்டங்களை மறுத்த ஒன்றிய அரசையும் திமுக தலைவர் விமர்சித்தார்.

* ‘வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) – FCRA சட்டத் திருத்தம் “கிறிஸ்தவத் தன்னார்வ நிறுவனங்கள் (NGOS), தேவாலயங்கள் மற்றும் பிற சிறுபான்மை நிறுவனங்கள் மீதான நேரடித் தாக்குதல்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு.

* என்.சி.இ.ஆர்.டி. அமைப்பை ‘நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக’ அறிவித்து கல்வி அமைச்சகம் அரசாணை வெளியீடு. இந்த அறிவிப்பின் மூலம், NCERT கல்வி நிறுவனம் பல்வேறு பாடப்பிரிவுகளை வழங்கவும், பட்டங்களை வழங்கவும் அதிகாரம் பெறுகிறது; மேலும், முனைவர் பட்டப் படிப்புகளை தொடங்குமாறும் அந்த கல்வி அமைப்பிற்கு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

* ‘துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநரிடம் இருந்து திரும்பப் பெறும் அதிகாரம் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உண்டு’, நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் வாதம்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* திரிணாமுல் முதல் பாஜக வரை, காங்கிரஸ் முதல் சிபிஎம் வரை: 2026 மேற்கு வங்கத் தேர்தலில் வாரிசு அரசியல் மய்ய இடத்தைப் பிடிக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ் மற்றும் சிபிஎம் போன்ற முக்கிய கட்சிகள் அனைத்திலும், ஏற்கனவே அரசியல் பின்னணி கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த வேட்பாளர்களே அதிக அளவில் களமிறக்கப்பட்டு வருகின்றனர்.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *