சென்னை ஏப்.7 ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.வெ.கி.ச.இளங்கோவனுக்கு கடந்த மாதம் திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டார். உடனடியாக போரூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கரோனா தொற்று ஏற்பட்டதால் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். உடல் நிலை சீரான நிலையில் அவரை கடந்த சில நாட்களாக சாதாரண வார்டில் வைத்து மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர். முழுமையாக குணம் அடைந்ததால் வீடு திரும்புவார் என்று மருத்துமனை நிர்வாகம் அறி வித்தது. அதன்படி நேற்று (6.4.2023) இளங்கோவன் இல்லம் திரும்பினார். அங்கிருந்து காரில் வீட்டுக்கு சென்றார். அவருடன் நாசே ராமச்சந்திரனும் சென்றார். இளங்கோவன் வழக்கமான உற்சாகத் துடன் புறப்பட்டு சென்றார். அவர் கூறும்போது என்மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் நன்றி. இப் போது நலத்தோடு இருக்கிறேன் என்றார்.