சென்னை, ஏப். 7 தமிழ்நாடு வரும் பிரதமர் நரேந்திர மோடியை தனியாக சந்திக்க எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் நேரம் கேட்டுள்ளனர். பிரதமர் மோடி நாளை (8.4.2023) சென்னை வருகிறார். அப் போது, சென்னை விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முனையம் உள்ளிட்டவற்றை திறந்து வைக்க உள்ளார்.
இந்நிலையில், பிரதமரின் சென்னை வருகையின்போது அவரை தனித்தனியே சந்திக்க எடப்பாடி பழனிசாமியும், ஓ பன்னீர்செல்வமும் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக பொதுச் செயலாளரான பிறகு எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை சந்திக்க முதல் முறையாக நேரம் கேட்டுள்ளார். இந்த சந்திப்பின் போது கருநாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் உள்ளிட்ட விசயங்களை எடப்பாடி பேச திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல், அதிமுக வில் இருந்து ஓரங்கட்டப்பட்டு, சட்டப் போராட்டம் நடத்தி வரும் ஓ.பன்னீர் செல்வமும் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளது முக்கியத்தும் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. எனி னும், தற்போது வரை இருவருக்கும் பிரதமரை சந்திக்க நேரம் கொடுக்கப் படவில்லை என்றாலும் ஒரு சில நிமிடங்கள் தனித்தனியே சந்திக்க நேரம் வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.