தமிழ்நாட்டுல தேர்தல் பிரச்சாரங்களின் போது வன்முறை நடக்குறதோ, ஒருத்தர் கூட்டத்தில இன்னொருத்தர் பிரச்சினை பண்றதோ பழக்கமில்லாத விசயம். அரசியல் ரீதியான வன்முறைகள் தமிழ்நாட்டில் கிடையாது.
ஆனா நேத்து முளைச்ச கட்சி ஒண்ணு, வில்லிவாக்கத்துல கூட்டத்தில பெண்கள் மேல பாட்டில் துண்டுகள் வந்து விழுந்ததுன்னு சொல்லி, அதுக்கு திமுக-வைக் குற்றம் சாட்டி பேசியிருக்காரு அவங்க எலெக்சன் மேனேஜர்! பெரம்பூர்ல கூட்டத்துக்கு அனுமதி கொடுக்கலைன்னாலும் திமுக-வை காரணம் காட்டுறாரு.. எலெக்சன் கமிஷன்னு ஒன்னு இருக்கிறது தெரியுமா தெரியாதா?
ஒன்றிய தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதுறேன்னு, தமிழ்நாட்டுல உள்ளாட்சித் தேர்தல் நடத்துற அதிகாரிக்கு லெட்டர் எழுதுறாங்க!
உள்துறைச் செயலாளருக்கு லெட்டர் எழுதுறேன்னு ரிடையர்டாகி, இப்போ மணிப்பூர்ல ஆளுநரா இருக்கிறவருக்கு லெட்டர் எழுதுறாங்க… அரசியல் அடிச்சுவடியும் தெரியல….அட்ரசும் தெரியல..
முதல் நாள் வில்லிவாக்கம் கூட்டத்துக்குப் போகாம ஓடிப் போயிட்டு, அடுத்த கூட்டத்தைச் செய்தி ஆக்குறதுக்குத் தான் இந்த நாடகமான்னு கேட்கிறாங்க சமூக ஊடகங்கள்ல!
பாட்டில் அடிச்சவங்களை காவல்துறை அரெஸ்ட் பண்ணா இப்படித்தான் பேசுவாங்கன்னு இவர் என்ன சொன்னாரோ, அதே மாதிரி தான் கைது செய்யப்பட்ட ரெண்டு பேரும் சொல்லிருக்காங்க… அவங்க ரெண்டு பேரும் உங்க நடிகரோட ரசிகர்கள் தானாமே!
முன்னாடி நடத்துன கூட்டத்தில 41 பேரு கரூர்ல செத்தப்போ, பத்திரிகையாளர்கள் கிட்ட வந்து கூலா சிரிச்சுக்கிட்டே… “சாப்பிட்டுட்டுப் போங்கன்னு சொல்லத் தான் வந்தேன். வேற ஒன்னும் சீரியஸா இல்ல”ன்னு சொல்லிட்டு போனவரு… எலெக்சன் வந்ததும், அவர் தொகுதின்னதும் ஒரு கண்ணாடித் துண்டுக்குக் கொதிச்சு எழுறாரே!
“கியாரே… செட்டிங்கா? இதையெல்லாம் ‘கோ’ படத்திலேயே பார்த்துட்டோம்”னு சமூக ஊடகங்கள் அம்பலப்படுத்திடுச்சு பங்கு!
