லோக் போல் சர்வே முடிவுகள் வெளியீடு: மீண்டும் திமுக கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கிறது!

சென்னை, ஏப்.2 நேற்று (1.4.2026) வெளியாகியுள்ள லோக் போல் சர்வே முடிவுகளில் திமுக கூட்டணி 40.1 சதவிகித வாக்கு சதவீதத்துடன் 181 முதல் 189 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. கூட்டணி 29 சதவிகித வாக்குகளைப் பெற்று 38 முதல் 42 இடங்கள் வரை பிடிக்கும் என தெரிகிறது.

தமிழக வெற்றி கழகம் (தவெக) 23.9 சதவிகித வாக்குகளைப் பெற்று 8 முதல் 10 தொகுதிகள் வரை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சி 4.9 சதவிகித வாக்குகளைப் பெற்றாலும் இடங்களைக் கைப்பற்றாது என்றும், மற்றவர்கள் 2.1% வாக்குகளைப் பெறுவார்கள் என்றும் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

அதேபோல், யார் முதலமைச்சராக வேண்டும்? என்ற கேள்விக்கு 41 சதவீதம் பேர் மு.க.ஸ்டாலின் என்றும், 24.1 சதவீதம் பேர் எடப்பாடி பழனிசாமி என்றும், 27.1 சதவீதம் பேர் விஜய் என்றும், 7.8 சதவீதம் பேர் மற்றவர்கள் என்றும் பதில் அளித்துள்ளனர். 1,17,000 நபர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், அடுக்கு சீரற்ற மாதிரி முறை கையாளப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *