புதிய சட்டத்திருத்த மசோதாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை, ஏப்.2 ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டமுன்வரைவு, சிறுபான்மை நிறு வனங்கள் மீதான நேரடித் தாக்குதல் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாகச் சாடி யுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ‘எக்ஸ்’ (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: மதச்சிறுபான்மையினரை குறி வைக்கும் நடவடிக்கை ‘‘வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டமுன்வரைவு – 2026 என்ற பெயரில் ஒன்றிய பா.ஜ.க. அரசால் முன்மொழியப்பட்டிருக்கும் திருத்தங்கள், முழுக்க முழுக்க கிறித்தவத் தொண்டு நிறுவனங்க ளையும், கிறித்தவ கோயில் மற்றும் இதர மதச் சிறுபான்மைத் தொண்டு நிறுவனங்களையும் குறிவைத்துத் தொடுக்கப்படும் நேரடித் தாக்குதல் ஆகும்.’’

‘‘ஏற்கெனவே வஃக்பு வாரிய சட்டத்திருத்தம் மூலம் இஸ்லாமிய சொத்துகளைக் கபளீகரம் செய்ய முயன்றதையடுத்து, தற்போது மற்ற மதச்சிறுபான்மையின அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதியை முடக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு இறங்கியுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். கேரள மாநிலத் தேர்தல் மற்றும் எதிர்க்கட்சிகளின் போராட்டத்தைக் கருத்தில் கொண்டு, தற்காலிகமாகப் பின்வாங்குவது போல பா.ஜ.க. அரசு நடித்தாலும், விரைவில் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத் தொடரைக் கூட்டி இந்த சட்டத் திருத்தத்தை நிறைவேற்றத் திட்டமிடுவதாகத் தகவல்கள் வருவதாகவும்’’ மாண்புமிகு பிரதமர் அவர்கள் இந்தத் தன்னிச்சையான, அநியாயச் சட்டத்திருத்தத்தை முற்றிலுமாகத் திரும்பப் பெறும் நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *