தமிழ்நாட்டில், ஏப்ரல் வெப்பத்தின் தாக்கம் இயல்பைவிட அதிகமாக இருக்கும் வானிலை ஆய்வு மய்யம் எச்சரிக்கை!

1 Min Read

சென்னை, ஏப்.1  தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதத்தில் பகல் மற்றும் இரவு நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மய்யம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தற்போது வளிமண்டலத்தில் சுமார் 0.9 கி.மீ உயரத்தில், கிழக்கு உத்தரபிரதேசம் முதல் தென் தமிழ்நாடுவரை (விதர்பா, மரத் வாடா மற்றும் உள் கருநாடகா வழியாக) ஒரு காற்றழுத்த தாழ்வுப்பாதை  நிலை கொண் டுள்ளது.

இதன் காரணமாக:தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆங்காங்கே இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. ஏப்ரல் மாதத்தில் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் இயல்பை விட அதிக மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. மழை பெய்தாலும், வெப்பத்தின் பிடியில் இருந்து பெரிய அளவில் தப்பிக்க முடியாது என வானிலை ஆய்வு மய்யம் எச்சரித்துள்ளது.

வடக்கு மற்றும் கடலோர தமிழ்நாடு, உள் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் வழக்கத்தை விட அதிகமான நாட்கள் வெப்ப அலை வீசக்கூடும்.இரவு நேர வெப்பம்: பகல் நேரத்தில் மட்டுமல்லாது, இரவு நேரங்களிலும் வெப்பநிலை இயல்பை விட அதிகமாகவே இருக்கும். இதனால் இரவில் கிடைக்க வேண்டிய குளிர்ச்சி குறைந்து, ‘வெப்ப அழுத்தம்’ (Heat Stress) ஏற்பட வாய்ப்புள்ளது.

ஒட்டுமொத்தமாக இந்த ஏப்ரல் மாதம் அனல் தகிக்கும் மாதமாக இருக்கும். இடை யிடையே மழை பெய்தாலும், காற்றில் ஈரப்பதம் மற்றும் வெப்பம் காரணமாக உடல் ரீதியான சிக்கல்கள் தொடரக்கூடும். பொதுமக்கள் போதிய அளவு தண்ணீர் பருகவும், நண்பகல் நேரங்களில் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *