தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி நினைவுநாள் தெருமுனை பரப்புரைக் கூட்டம்-நூல் பரப்புப்பணி

7 Min Read

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம், கோவில் பட்டி வட்டம் சேட்டிக்குறிச்சி என்ற ஊரில் தளபதி பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரி 77ஆம் ஆண்டு நினைவு நாள் கழகப் பொதுக்கூட்டம் 28.3.2026 சனிக்கிழமை மாலை மிகச் சிறப்புடன் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர் கோ.முருகன் தலைமையில், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் செ.ஜெயா வரவேற்புடன் 6 மணியளவில் கூட்டம் தொடங்கியது. வி.சி.க. தொழிலாளரணி அழகுமுத்து சிறிய உரையாற்றியபின் மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் சொ.பொன்ராஜ் தொடக்வுரையாகத் திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்களை விளக்கி, மீண்டும் தி.மு.க. அரசு தொடர்ந்திட வாக்களிக்க மக்களை வேண்டி உரையை நிறைவு செய்தார்.

அடுத்து, கழகச் சொற்பொழிவாளர் மா.பால்ராசேந்திரம், தளபதி அழகிரி அவர்களின் நிபந்தனையற்றக் கழகப் பணியினை தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞரோடு, இணைந்த செய்திகளை விளக்கி உரையைக் கொண்டு சென்றார். சுயமரி யாதை இயக்கம் ஆற்றிய பணியால் இன்று மக்கள் அடைந்து வரும் வளர்ச்சியினை, திராவிட மாடல் அரசு தொடர்ந்து செயலாற்றி வரும் கல்வி, வேலைவாய்ப்புத் திட்டங்களை விளக்கி, மீண்டும் அதே நல்லாட்சி தொடர்ந்திடத் தி.மு.க.வுக்கே வாக்களிப்பீர் என மக்களைக் கேட்டு உரையை நிறைவு செய்தார். செட்டிக்குறிச்சி கழகப் பொறுப்பாளர் பொன்.மாரியப்பன் நன்றி கூற கூடடம் இரவு 8.30 மணிக்கு நிறைவு பெற்றது.

சு.சிவாமகேஸ்வரி, தூத்துக்குடி மாநகரத் தலைவர் த.பெரியார்தாசன், மாவட்டத் தொழிலாளரணி அமைப் பாளர் த.நாகராஜ், விளாத்திகுளம் ஒன்றியச் செயலாளர் மு.பாலமுருகன், தூத்துக்குடி ப.க. கி.கோபால்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். பெரியார் பிஞ்சுகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு உரை யைக் கேட்டு மகிழ்ந்தனர்.

கன்னியாகுமரி

குமரி மாவட்ட கழக சார்பாக கன்னியாகுமரி மலங்கரைபவன் விருந்தினர் மாளிகையில் சுயமரியாதை இயக்க வீரர் அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்களுடைய நினைவுநாள் கூட்டம் எழுச்சிகரமாக நடைபெற்றது. குமரி நகர கழகச் செயலாளர் யுவான்ஸ் வரவேற்புரையாற்றினார்.

கழக மாவட்டத் தலைவர் மா.மு.சுப்ரமணியம் தலைமை தாங்கினார். காப்பாளர் ம.தயாளன், பகுத்தறிவாளர்கழக மாவட்டத் தலைவர் உ.சிவதாணு, பொதுக்குழு உறுப்பினர் மு.இராஜசேகர் கோட்டாறு பகுதி தலைவர் ச.ச மணிமேகலை ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.

மாவட்ட கழகச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தொடக்கவுரை யாற்றினார். கன்னியாகுமரி நகர் மன்ற தலைவர் குமரி ஸ்டீபன் விளக்கவு ரையாற்றினர்.

திராவிட மாணவர் கழக மாநில இணைச்செயலாளர் மு.இளமாறன் விரிவாக சிறப்புரையாற்றினார். பெரியார் பெருந்தொண்டர் மு.பால்மணி, சி.அய்சக் நியூட்டன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய கழக செயலாளர் எஸ்.குமார தாஸ், மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் மஞ்சு குமாரதாஸ், திமுக தோழர்கள் கவுன்சிலர் டெல்பின் ஆன்டனி மற்றும் ஏராளமான தோழர்கள் பெருந்திரளாக பங்கேற்று தந்தை பெரியார் புகழ் வாழ்க அஞ்சா நெஞ்சன் அழகிரி புகழ் வாழ்க என கொள்கை முழக்கமிட்டனர். கன்னியாகுமரி மாவட்ட திராவிட மாணவர் கழகத் தோழர் இரா.முகிலன் நன்றி கூறினார். அழகிரி அவர்களுடைய படம் விழாவில் திறக்கப்பட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

செய்யாறு

செய்யாறு மாவட்ட கழகத்தின் சார்பில் 28.3.2026 மாலை 6 மணிக்கு பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி 77ஆவது நினைவு நாள் தெருமுனை பரப்புரைக் கூட்டம் மாவட்ட கழகத் தலைவர் அ.இளங் கோவன் தலைமையில் நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் வி.வெங்கட்ராமன், என்.வி.கோவிந்தன் முன்னிலை வகித்தனர்.

தந்தை பெரியார் பகுத்தறிவு கொள்கைகளை ஏற்று நாடு முழுவதும் பிரச்சாரம் செய்த சுயமரியாதைச் சுடரொளி திராவிடர் கழகத்தின் பிரச்சார பீரங்கி பட்டுக்கோட்டை அழகிரியின் நினைவுகளை விளக்கி கழக சொற்பொழிவாளர் வழக்குரைஞர் சு.பெ.தமிழமுதன் சிறப்புரை ஆற்றினார்.

நகர கழக தலைவர் தி.காமராசன், மாவட்டச் செயலாளர் பொன்.சுந்தர், சிறுநல்லூர் டி.சின்னதுரை, மாணவர் கழக செயலாளர் செ.அரவிந்த் பொக்க சமுத்திரம் பி.பரந்தாமன், என்.கஜபதி, மாங்கால் ஜி.ரங்கநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தங்கம் கே.பெருமாள் நன்றி கூறினார்.

திருநெல்வேலி – வீரவநல்லூர்

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் 28.3.2026 அன்று மாலை மாவட்ட கழகத்தின் சார்பில் பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன்அழகிரி நினைவு நாள் கூட்டம் நடைபெற்றது.

மாநில இளைஞரணிச் செயலாளர் மு.தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. நகர கழகத் தலைவர் மா.கருணாநிதி வரவேற்புரை ஆற்றினார்.

மாவட்ட கழக துணைத் தலைவர் ந.மகேஷ், மாவட்ட கழக துணைச்  செயலாளர் செ.மாரிகணேசு, மாவட்ட ப.க.தலைவர் செ.சந்திரசேகர்முன்னிலை வகித்தார்கள். மாவட்ட திராவிடர் கழக செயலாளர் இரா.வேல்முருகன் தொடக்கவுரையாற்றினார்.

கழக மாநில ஒருங்கிணைப் பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் இதோ பெரியாருள் பெரியார் நூலினை அறிமுகம் செய்து உரையாற்றினார். கழகக்காப்பாளர்  இரா .காசி நூலினை வெளியிட்டார். மாவட்ட கழகத் தலைவர் ச.இராசேந்திரன் நூலினை பெற்றுக் கொண்டு உரையாற்றினார்.   கழகசொற் பொழிவாளர் இரா .பெரியார் செல்வன் சிறப்புரை ஆற்றினார். ஒன்றிய திராவிடர் கழக தலைவர் கோ.செல்வ சுந்தரசேகர் நன்றி கூறினார்.

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை நகர, ஒன்றிய கழக சார்பில், 28.03.2026 சனி மாலை 6 மணியளவில், பாலையம்பட்டி தேரடி திடலில், சுயமரியாதைச் சுடரொளி பட்டுக்கோட்டை அழகிரி அவர்களின் 77ஆவது நினைவு நாள் பரப்புரைக் கூட்டம், மாவட்ட கழக துணைச் செயலாளர் இரா.அழகர் தலைமையில், மாவட்ட அமைப்பாளர் பெ.சந்தனம் முன்னிலையில் நடைபெற்றது.

மாவட்ட கழக. துணைத் தலைவர் பா.இராசேந்திரன் வரவேற்பு ரையாற்றினார். பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் துணைத் தலைவர் ந.ஆனந்தம், மாவட்ட கழக தலைவர் கா.நல்லதம்பி ஆகியோர் உரையாற்றினர். கழகப் பேச்சாளர் ஆண்டிபட்டி செ.கண்ணன் பட்டுக்கோட்டை அழகிரி அவர்களின் தொண்டறம் போற்றி தொடக்கவுரையாற்றினார்.

நிறைவாக கழகச் சொற்பொழிவாளரும் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியாளருமான மதுரை சுப.பெரியார்பித்தன் மந்திர மல்ல! தந்திரமே! செயல் விளக்க நிகழ்ச்சியுடன், திராவிட மாடல் அரசு தொடர, தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டி சிறப்புரையாற்றினார்.

மாவட்டச் செயலாளர் விடுதலை தி.ஆதவன் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தார். தோழர் க.எழிலன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் க.திருவள்ளுவர், நகரச் செயலாளர் மு.முனியசாமி, அமைப்பாளர் க.சுப்பிரமணி, ஒன்றியத் தலைவர் மா.முத்துக்குமார், தோழர் பொ.கணேசன், ப.வெங்கடேசன் மற்றும் கழகத் தோழர்கள்,தோழமை இயக்க நண்பர்கள் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று சிறப்பித்தனர். இறுதியாக ஒன்றியச் செயலாளர் இரா.முத்தையா நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது.

கரூர்

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளை யம் மலை வீதியில் கரூர் மாவட்ட கழகத் தின் சார்பில் சுயமரியாதை இயக்கத்தின் ஆணிவேர் தளபதி பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரியின் 77ஆம் ஆண்டு நினைவு நாள் பரப்பரை பொதுக் கூட்டம் 28-3-2026 அன்று மாலை 6 மணி அளவில் கரூர் ஒன்றிய தலைவர் சு பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.

சா. மோகன் மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட காப்பாளர் வே ராஜு, மாவட் டத் தலைவர் குமாரசாமி, மாவட்ட செயலாளர் காளிமுத்து, பொதுக்குழு உறுப்பினர் சே. அன்பு, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜெகநாதன்,மாவட்ட துணைச் செயலாளர் அலெக்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்புரையாக கழக பேச்சாளர் அரியலூர் க. சிந்தனை செல்வன் தளபதி பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன்  அழகிரியின் நினைவலைகளை பற்றி பேசினார்.

தந்தை பெரியாருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அழகிரி போர்ப்படை தளபதியாகவே செயல்பட்டார். அவர் இயக்கத்தின் மீதும் இயக்கத்தின் தலைமை மீதும் பெரிய பற்று வைத்திருந்தார். ஒரு முறை பார்ப்பனர்கள் வசிக்கக் கூடிய பகுதியில்  அழகிரி அவர்கள் பொதுக்கூட்டம் ஒன்று போட்டு பேசிக் கொண்டிருந்தார் அப்போது அவர் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. அவர் பேச்சு நிறுத்தாமல் உடனடியாக பக்கத்தில் இருந்த தோழர்களிடம் அங்கே இருக்கிற கற்களை எடுத்து மேடையில் வையுங்கள் என்று சொன்னார். பின்பு அந்தக் கற்களை எந்த திசையிலிருந்து வந்ததோ அந்த திசை நோக்கி வீசி எறிந்தார் நாங்களும் பதிலடி கொடுப்போம் என்று பேசினார். அப்போது அங்கிருந்த பார்ப்பனர்கள் துண்டைக் காணோம் துணியை காணோம் என்று ஓடினார்கள் என்று பழைய நிகழ்வை எடுத்துக்காட்டி கழக பேச்சாளர் க.சிந்தனைச் செல்வன் பேசினார்.

செஞ்சி-சென்னகுணம்

சமூகநீதிக்காகவும், சுயமரியாதைக்காகவும், சாதி ஆதிக்கத்துக்கு எதிராகவும் தன்னலமின்றி குரல் கொடுத்த திராவிட இயக்கத் தளபதி அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரிசாமி அவர்களின் 77ஆம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டம் சென்னகுணம் பகுதியில் நேற்று (28-03-2026) மாலை 5.00 மணிக்கு, கழக தோழர்களின் ஏற்பாட்டில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கழகப் பேச்சாளர் இரா. அன்புமதி, கழக பேச்சாளர் வேட்டவலம் பட்டாபிராமன், பழங்குடி மக்கள் முன்னணி நிறுவனத் தலைவர் சுடரொளி சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். அவர்கள் தங்களது உரைகளில், பட்டுக்கோட்டை அழகிரிசாமி அவர்கள் பெரியாரின் கொள்கைப் பாதையில் அஞ்சாத மனத்துடன் போராடிய முன்னோடி என்றும், அவரது வாழ்க்கை இன்றைய தலைமுறைக்கு வழிகாட்டும் தீபம் என்றும் குறிப்பிட்டனர்.

“மூடநம்பிக்கைக்கு எதிராகவும், ஜாதி ஆதிக்கத்துக்கு எதிராகவும், மனித சமத்துவத்திற்காகவும் அஞ்சாத குரலாக வாழ்ந்தவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி” மேலும், மூடநம்பிக்கை எதிர்ப்பு, ஜாதி ஒழிப்பு, பகுத்தறிவு, மனிதநேயம், சமூக மாற்றப் போராட்டம் ஆகிய துறைகளில் அவர் ஆற்றிய பங்களிப்புகள் நினைவுகூரப்பட்டன. இந்நிகழ்வில் கழக முன்னோடிகள், பொறுப்பாளர்கள், தோழர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு உரையாற்றினர். கூட்டம் முழுவதும் சமூகநீதி உணர்வும், இயக்க எழுச்சியும் நிரம்பிய சூழலில் சிறப்பாக நடைபெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *