சென்னை, மார்ச் 31 தமிழ் நாட்டில் நடைபெறவுள்ள தேர்தலில், மதச்சார்பின் மையைப் போற்றவும், மாநில உரிமைகளைக் காக்கவும் அமைக்கப்பட்ட வலுவான கூட்டணி இது என்று தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது வெறும் எண்ணிக் கையால் உருவான கூட்டணி அல்ல, கொள்கை ரீதியாக இணைந்த கூட்டணி என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு இதுவரை காணாத மாபெரும் வெற்றியை ஈட்டப்போகும் ‘மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி’ கட்சித் தலைவர்களாகிய நாங்கள் இணைந்து இந்த உறுதிமொழியை அளிக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கூட்டணி மதச்சார்பற்ற கொள்கைகளைத் தற்காப்பதிலும், மாநிலத்தின் உரிமைகளை நிலைநாட்டு வதிலும் உறுதியாகச் செயல்படும் என்பதை முதலமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
