சென்னை, மார்ச் 31- சென்னை வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வட ஒடிசா முதல் தெலங்கானா, கருநாடகா வழியாக தென் தமிழ்நாடு வரை ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை சுமார் 900 மீட்டர் உயரத்தில் நிலவுகிறது.
இதன் காரணமாக, (மார்ச் 30) முதல் ஏப்.2ஆம் தேதி வரை மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
3ஆம் தேதி மேற்கண்ட பகுதிகளுடன் தென் தமிழ்நாட்டின் மாவட்டங் களிலும் மழை பெய்யும்.
4ஆம் தேதி தமிழ் நாட்டில் வறண்ட வானிலை நிலவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
