பட்டுக்கோட்டை நகர மன்ற தலைவர் சே. சண்முகபிரியா, தி.மு.க. மாவட்ட மகளிரணி அமைப்பாளர் அசோக் ராணி, விடுதலைச் சிறுத்தைகள், கட்சி கம்யூனிஸ்ட் இயக்க தோழர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர். கழகத் தோழர்கள் தமிழர் தலைவரிடம் இயக்க இதழ்களுக்கு சந்தா, ‘பெரியார் உலக’ நிதி வழங்கினர்.

அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி மணி மண்டபத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு அழகிரியின் பேரன் ஆர். அழகிரி சுப்பையா ராஜா (மாவட்ட தி.மு.க. சுற்றுச்சூழல் அணித் தலைவர்) மற்றும் தோழர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர். பேராவூரணியில் பல்வேறு கட்சியினர் தமிழர் தலைவரை மல்லிகை சிதம்பரம் இல்லத்தில் சந்தித்தனர்.

பெரியார் பெருந்தொண்டர் காளிதாசன் இல்லத்தில் மாவட்ட செயலாளர் கா.தென்னவனின் தாயார் மறைந்த பேபி படத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மலர் வணக்கம் செலுத்தி குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்

பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர் வை.சிதம்பரத்தின் சகோதரர் மறைந்த மல்லிகை வை.முத்துராமலிங்கம் படத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மலர் வணக்கம் செலுத்தி குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
