“த.வெ.க.வினர் கொலை மிரட்டல்… குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல்…” விஜய் மீது பொன்ராஜ் புகார்!

1 Min Read

சென்னை, மார்ச் 30- த.வெ.க.வினர் கொலை மிரட்டல் விடுப்பதாக அரசியல் விமர்சகர் பொன்ராஜ், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் த.வெ.க.வினர் கொலை மிரட்டல் விடுப்பதாக அரசியல் விமர்சகர் பொன்ராஜ், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

த.வெ.க. கட்சியைச் சேர்ந்த பெண்கள் குறித்து அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி த.வெ.க. தலைவர் விஜய் காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் நேரில் வந்து புகார் மனு அளித்திருந்தார்.

இந்நிலையில், த.வெ.க.வினர் தொலைபேசி வாயிலாகவும், சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு இமெயில் மூலம் பொன்ராஜ் புகார் அளித்துள்ளார்.

அந்த மனுவில், விஜய்யை எதிர்ப்பவர்களை அவதூறு செய்து, சமூக ஊடங்களில் அவர்களின் புகழை அரசியல் ரீதியாக களங்கப்படுத்தி, அவர்களது சொந்த குடும்பத்தினரையும் அவதூறு செய்யும் சமூக வலைதள விமர்சகர்கள் குறித்து அவர் ஒருபோதும் கண்டிக்கவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

விஜய் அமைதியாக இருப்பது மட்டுமல்லாமல், ஆதவ் அர்ஜுனா நடத்தி வரும் கால் சென்டர் மூலம் கொலை முயற்சி மிரட்டல் அழைப்புகள் விடுக்கப்படுவதாகவும் புகார் அளித்துள்ளார். ரவுடி கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் விஜய், ஆதவ் அர்ஜுனா மற்றும் த.வெ.க.வினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் புகாரில் பொன்ராஜ் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *