“Social Media”

3 Min Read

ஒரு புத்தகம் என்ன செய்யும்…?

1.ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நமக்கு அதுவரை தெரியாத விவரங்கள் தெரியவரும்.

2.ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நம்மு டைய பொதுப் புத்தியில் அதுவரை தெரிந்த தகவல்கள், உண்மைகள், விழு மியங்கள், அனைத்தைப் பற்றியும் வினாக்கள் உருவாகும்.

3.ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நமது அறிவுப்பரப்பு ஒரு மில்லி மீட்டராவது விசாலமாகும்.

4.ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நம்மு டைய உணர்வுகள் கூர்மையடையும்.

5.ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நாம் அதுவரை நம்பியிருந்த உண்மைகள் பொய்களாக மாறும்.

6.ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நம்முடைய வீடு, ஊர், மாவட்டம், மாநிலம், நாடு, இனம், மதம், ஜாதி, மொழி, இவையாவும் மறைந்து போகும். பேரண்ட மனிதனாக உணரமுடியும்.

7.ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது உல கின் எந்த மொழிபேசும் மனிதர்களின் வாழ்வை. அவர்களுடைய பண்பாட்டை பழக்க வழக்கங்களை, அந்த மொழி தெரி யாமலேயே புரிந்துகொள்ள முடியும்.

8.ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நம் முடைய மூடநம்பிக்கைகள் ஒழிந்து அறிவியல் பார்வை உருவாகும்.

9.ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது சனாதனத்துக்கும் மரபுக்கும் நவீனத் துக்கும் உள்ள வேறுபாடுகள் தெரியும்.

10.ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது வர லாற்றுக்கும் புராண இதிகாசங்களுக்கும் உள்ள வித்தியாசம் புரியும்.

11.ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நாம் வாழும் சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும். என்ற ஆவல் ஏற்படும்.

12.ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது காக்கை, குருவி, கடல், மலை, என்று இயற்கையை ஆராதிக்கத் தோன்றும்.

13.ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது காதலின் ஊற்றுக்கண் பொங்கிப் பிரவ கிக்கும்.

14.ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது ஜாதி, மதத்தின் பின்னுள்ள சதிவலையைப் புரிந்து கொள்ள முடியும்.

15.ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது இந்த உலகத்தின் மீது விரிந்துள்ள ஏகாதிபத்தியத்தின் சதி வலையைத் தெரிந்து கொள்ள முடியும்.

16.ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது பார்க்கிற அத்தனை ஜீவராசிகள் மீதும் அன்பு கொள்ளத் தோன்றும்.

17.ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது சமத்துவமற்ற, ஏற்றதாழ்வுகளுள்ள இந்த சமூகத்தின்மீது கோபம் பொங்கும்.

18.ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது மனிதனை மனிதன் சுரண்டும் அமைப் பினை மாற்றத்தோன்றும்.

19.புத்தகம் மனிதகுலத்தின் அறிவுச் சொத்து.

(வாசியுங்கள்! – வலைதளத்தில் படித்தது…)

இட்லியும் இசங்களும்

இட்லி வெந்திருக்குன்னு சொன்னா அது OPTIMISM (நம் பிக்கை).

இட்லி வேகலைன்னு சொன்னா அது PESSIMISM (நம்பிக்கை யின்மை)

இட்லியெல்லாம் சுட முடியாது போடான்னு பொண்டாட்டி சொன்னா அது FEMINISM (பெண்ணியம்)

இட்லியைச் சுட்டது யாருன்னு பரபரப்பு கிளப்பினா அது JOURNALISM (இதழியல் போக்கு)

இட்லி அரசாள்வோர் சாப்பிட்ட பிறகுதான் நமக்குன்னு சொன்னா அது IMPERIALISM (தனி வல்லாண்மைப் போக்கு)

இட்லிய வச்சு இட்லி உப்புமா செஞ்சதெல்லாம் POSTMODEMISM (பின் நிலை வாதம்)

இட்லி மேலே Made in India சீல் வச்சா அது NATIIONALISM (தேசிய வாதம்)

இட்லி ஒரு ரூபான்னு அம்மா உணவகத்திலே எல்லோருக்கும் கொடுப்பது SOCIALISM (பொதுநலக் கோட்பாடு.

இட்லி என்னடா சிறுத்துப் போயி கிடக்குன்னு சொன்னா அது RACISM (இனவாதம்)

இட்லி இதுக்கு மேலே கிடையா துன்னு சொன்னா அது CAPITALISM (முதலாளித்துவம்)

இட்லி எந்திரத்திலே பண்ணினா அது MODERNISM (நவீனவியம் அல்லது புத்தியம்)

இட்லியை Fork and Spoon  வெச்சிச் சாப்பிட்டா அது SKEPTICISM(மேல்தட்டு மனப்பான்மை)

இட்லி வட இந்தியாவிலே நல்லா இருக்காதேன்னு நினைச்சா அது ELITISM (அய்யுறவு)

இட்லி நல்லா இல்லைன்னு சொன்னா அது CRITICISM  (திறனாய்வு)

இட்லி மட்டும்தான் நல்ல காலை உணவுன்னு ஒத்தைக் காலில் நின்னா அது  FANATICISM(வெறிக்கொள்கை)

இட்லி நன்றாகச் செரித்தால் அது  METABOLISM(வளர்சிதை மாற்றம்)

இட்லி பிடிக்காதவன் அது எனக்குப் பிடிக்காதுன்னு சொன்னா அதுCHAUVINIS  (பேரினவாதம்)

இட்லியே வேணாமுன்னு எழுந்திருச்சிப் போயிட்டா அது MESCAPISM (தப்பிக்கும் போக்கு).

இட்லிக்கு இவ்வளவு விளக்கம் தேவையா என்று என்மேல் கடுப்பாகி. என்னை அடிக்க நீங்கள் நினைத்தால் அது  TERRORISM(தீவிர வாதம்). 

(சமூக வலைதளத்தில் படித்தது – பிடித்தது)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *